விமானத்தை கையால் தள்ளிய பயணிகள்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்!

தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், வழியில் நின்றுப் போன விமானத்தை பழச்சாறு அருந்திவிட்டு, இளைஞர்கள் கையால் தள்ளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்

இந்தோனேசியாவில் தரையிறங்கிய 35,000 கிலோ எடை கொண்ட விமானத்தை பயணிகள் கையால் தள்ளிய சம்பவம் இணையவாசிகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

சி ஆர் ஜெ 1000 விமானம் சுமார் 35,000 கிலோ எடை கொண்டது. கருடா இந்தோனேசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்போலாகா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் இறங்கி வந்து, விமானத்தை கையால் தள்ளினர்.

இதை கண்டு, விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இந்த காட்சியை அனைவரும் தங்களின் மொபைல்களில் படம் எடுக்க ஆரம்பித்தனர். பின்னர், விமான அதிகாரிகள் இதுக் குறித்து பயணிகளிடன் விசாரித்தனர். அப்போது, விமானம் தவறான திசையில் தரையிறக்கப்பட்டதாலும், விமானத்தைப் பின்னோக்கி தள்ளும் கருவி இல்லாததாலும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் கையால் விமானத்தை தள்ளியதாகக் கூறியுள்ளனர்.

இதுக் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 35,000 கிலோ எடை கொண்டக் கொண்ட விமானம் பழுதாகி நின்று விட்டதால், பயணிகள் அதை மாநகர பேருந்து போல், தள்ளுவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், விமானத்தை பயணிகள் கையால் தள்ளும் காட்சிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் இணையத்தில் பரவி வருகிறது.

தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில்,  வழியில் நின்றுப் போன விமானத்தை பழச்சாறு அருந்திவிட்டு, இளைஞர்கள் கையால் தள்ளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த காட்சிகள் தற்போது நிஜத்தில் இந்தோனேசியாவில் நடந்திருப்பது  விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close