‘இது என் தமிழ் சகோதர சகோதரிகளுக்காக…’ மோடி இன்று புதிய அறிவிப்பு!

கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே நினைவு கலந்தாய்வு அரங்கில் அவர் உரையாற்றிய போது….

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். இந்நிலையில், கொழும்புவிற்கும் வாரணாசிக்கும் இடையே நேரடியாக விமான சேவை தொடங்கப்படும் என மோடி இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே நினைவு கலந்தாய்வு அரங்கில் அவர் உரையாற்றிய போது, “இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஏர் இந்தியா, கொழும்புவிற்கும் வாரணாசிக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்தை ஆரம்பிக்கும். இதன்மூலம், என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகள் காசி விஸ்வநாத் குடியிருக்கும் வாரணாசி மண்ணுக்கு வர முடியும்” என்றார்.

முன்னதாக, நேற்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமன் சிங்கே ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Modi announce new flight service between colombu and varanasi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com