பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தி அவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என்ற புதிய முன்னோடி சட்டத்தை நேபாள அரசு இயற்றியது.
நேபாளத்தில் இனி மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துதல் குற்றமாகும். அந்த சமயங்களில், அவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல் நடத்துதல் சட்டத்திற்கு புறம்பானது என நேபாள அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்த குற்றத்தை புரிவோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது ரூ.3,000 அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும் என அச்சட்டம் கூறுகிறது.
நேபாளத்தில் இந்து மதத்தின்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது தீண்டத்தகாதவர்கள் என்ற வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறது. மாதவிடாய் அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போ, அவர்கள் தனிமைப்படுத்துவது இனி குற்றமாகும்.
அந்நாட்டில், பெண்கள் மாதவிடாய் காலங்களின்போதோ, அல்லது குழந்தை பிறப்பிற்கு பின்போதோ, சிறு குடிசைகளில் அல்லது மாட்டு கொட்டகைகளிலும் தங்கவைத்து தனித்து வைக்கப்படுகிறார்கள்.
இந்த வழக்கம் நேபாளத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களுக்கும் செல்லக்கூடாது.
பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாதவிடாயால் தங்களை புறக்கணிப்பது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உள்ளது என பல பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்கள் அடிப்படையில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதவிடாய் சுகாதாரம் கூட பல நம்பிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிறது. தாங்கள் அக்காலத்தில் உபயோகித்த ஆடைகளை வெகு தொலைவில் சென்று துவைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இன்றளவும் பெண்கள் தங்கள் சானிட்டரி நாப்கின்களை கடைகளில் வாங்கி மறைவாக கொண்டு செல்கின்றனர்.
இந்திய உச்சநீதிமன்றம் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் நுழையும் உரிமையை உறுதி செய்தாலும், கோவில்களில் பெண்கள் அந்த காலங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.