Advertisment

மீண்டுவருமா வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்? மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!

ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு வந்தது.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Northern white rhinos Leibniz institute conducted successful ovum pick up

Northern white rhinos Leibniz institute conducted successful ovum pick up

Northern white rhinos Leibniz institute conducted successful ovum pick up : இந்த புகைப்படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஞாபகத்தில் இருக்கும். இவன் தான் சூடான். கடைசி வெள்ளை வடக்கு காண்டாமிருகம். அவனின் இறுதி காலங்களை கண்டு கண்ணீர் கலங்கியவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஆனால் அவர்களின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், விலங்கு நல ஆர்வலர்களுக்கும் முக்கியமான மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Advertisment

2018ம் ஆண்டு உலகில் மொத்தமாகவே 3 வெள்ளை வடக்கு காண்டாமிருகங்கள் மட்டும் தான் உயிரோடு இருந்தது. முறையாக பார்த்தால் அப்பா, மகள், பேத்தி என்ற வாரிசில் ஒற்றை இனம் மட்டுமே தங்கியது. முதுமை காரணமாக வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் மூத்த சூடான் மார்ச் மாதம் உயிரிழந்தது. சூடானின் மகள் நாஜினும், பேத்தி ஃபட்டுவும் தான் இன்று உயிரோடு இருக்கின்றார்கள்.

publive-image ஃபட்டுவும், நாஜினும்

ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் எத்தனையோ முயற்சிகளை ஆப்பிரிக்க அரசு மேற்கொண்ட போதும் அந்த இனங்கள் அழிவை நோக்கி பயணிக்க துவங்கியது. ஒரு ஆண் அல்லது பெண் காண்டாமிருகத்தின் கொம்பு என்பது தன்னுடைய இணைக்கான போட்டியில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதையும், தனக்கு வரும் எதிரிகளை வீழ்த்தவும், தனக்கான உணவினை பெறவும் பயன்படுகிறது. அதே தான் யானைகளின் தந்ததங்களுக்கும். கொம்புகள் அற்ற விலங்குகள் என்பது கையற்ற மனிதர்களை போன்று தான். இணை, உணவு, பாதுகாப்பு இல்லாமல் இந்த இனங்கள் அழியத் துவங்கியது.

publive-image ஃபட்டு மற்றும் நாஜினி கருமுட்டைகள் திரவ நைட்ரஜினில் வைத்து பாதுகாக்கப்பட்ட போது

2018ம் ஆண்டு சூடானும் இறந்து விட நம் கண் முன்னே ஓர் விலங்கினம் அழிந்து விட்டது. ஆனால் மேம்பட்டு இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் மறைந்து கொண்டிருக்கும் இந்த இனத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் இது போன்று முதிர்ச்சியடையாத கருமுட்டைகள் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடைகாக்கப்பட்டது. அம்முட்டைகள் கிறிஸ்துமஸ் வாரத்தில் கருவுற்றது. இந்நிலையில்  தற்போது மீண்டும் வெற்றிகரமாக இரண்டு காண்டாமிருகங்களிடம் இருந்தும் கருமுட்டை எடுக்கப்பட்டு, இத்தாலியில் உள்ள அவண்டியா ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.  தற்போது இந்த கருவுற்ற முட்டைகளை தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களில் வைக்கப்பட்டு வாடகை தாய் முறையில் மூலமாக மீண்டும் வெள்ளை வடக்கு காண்டாமிருகங்கள் வளர்ப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஆராய்ச்சி குழு.

South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment