தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
நவீன கண்டுபிடிப்புகள், தொழிற்நுட்ப வளர்ச்சி மூலம் உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. இதனால் தமிழர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்து, வேலை செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழரின் பண்டிகைகளையும், பண்பாட்டையும், வழக்கங்களையும் மறப்பதில்லை.
ஆப்பிரிக்காவில் பொங்கல்: ஆப்பிரிக்காவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து நிலையில், அங்கு 250க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ளன. இதனால் பொங்கல் விழா ஆப்ரிக்காவில் தேசிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. ஆப்ரிக்காவில் உள்ள இந்து கோவில் சங்கம் சார்பில் ஆண்டுத் தோறும் பொங்கல் பண்டிக்கை, தமிழகத்தில் கொண்டாடுவது போல சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் போது, தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன், ஆப்பிரிக்க மக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் பொங்கல்: ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ் உள்ள நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், அங்கு தமிழ் சங்கங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த தமிழ் சங்கங்களின் மூலம் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து பொங்கல் பண்டிகையை ஆண்டுத்தோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாட்களாக கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்தாலி, டென்மார்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களாலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆசிய நாடுகளில் பொங்கல் கோலாகலம்: ஆசியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளான இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றது. இதனால் பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் ஆண்டுத் தோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது. தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாறைசாற்றும் எண்ணற்ற இந்து கோவில்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படும் பொங்கல் கடவுளுக்கு படைக்கப்பட்டு, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. பொங்கல் பண்டிகை மேற்கண்ட நாடுகளில் மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
துபாயில் பொங்கல்: அரேபிய நாடுகளான துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட இந்து கோவில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகின்றன. சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல்: தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை பல முறைகளில் கொண்டாடப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் 10க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ள நிலையிலும், தமிழ் கலாச்சார முறையில் இங்கு பொங்கல் கொண்டாடப்படுவதில்லை. நியூஸ்லாந்தில் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை தொடர்ந்து, தமிழ் சங்கம் அமைத்து தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட முயற்சிகள் நடந்து வருகின்றது.
அமெரிக்காவில் பொங்கல்: அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களில், தமிழகத்தை போலவே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது. கனடாவில் உள்ள தமிழர்களும், பொங்கலை முன்னிட்டு, இனிப்புகளை பகிர்ந்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, மற்ற மாநில மக்களும் அதே உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை "லொஹரி" என்ற பெயரிலும், ஹரியானாவில் "மாகி" என்ற பெயரிலும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் "மகா சாஜா" என்றும் அழைக்கப்படுகிறது.
மகர சங்கராந்தி என்ற பெயரிலேயே உத்தரப்பிரதேசம், பீகாரிலும், ராஜஸ்தானில் "மகர் சக்ராத்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.ஆனால், அறுவடை நாளாக ஒரு பக்கம் இருந்தாலும். இதனை பாவங்களை தீர்க்கும் நன் நாளாகவே அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, மகர சங்கராந்தி தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குஜராத்தில் இந்தப் பண்டிகையின் பெயர் "உத்ராயண்". பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.