Rare polka-dotted zebra foal spotted in Maasai Mara : மாசய் மாரா, ஆப்பிரிக்க நாடுகளான கென்யா மற்றும் தன்ஸானியா நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் மாபெரும் தேசிய பூங்கா. பல்லுயிர்த் தன்மை ஓங்கி வளர்ந்திருக்கும் இந்த புல் காடுகளில் சிங்கம், சிறுத்தை, காண்டாமிருகம், காட்டெருமைகள் மற்றும் வரிக்குதிரைகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இங்கு இருக்கும் அழகான பல்லுயிர் சூழலை புகைப்படமாக பதிவிடவே வருடந்தோறும் ஆயிரக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் மாசய் மாராவிற்கு பயணம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
Rare polka-dotted zebra foal spotted in Maasai Mara
சமீபத்தில் இந்திய வனவியல் புகைப்படக் கலைஞர் சுதிர் சிவராமன் தன்னுடைய புகைப்படக் குழு நண்பர்களுடன் மசாய் மாராவில் புகைப்படங்களை எடுத்து வருகிறார். அப்போது வரிக்குதிரைகளுக்கு அருகே மிகவும் அழகான ஆனால் அதிக கருப்பு நிறத்தில் சிறு சிறு வெள்ளைப் புள்ளிகளுடன் ஒரு வரிக்குதிரை காணப்பட்டது. வரிகள் இல்லாமல் மான்களுக்கு இருக்கும் ஸ்பாட்கள் போல் அதிகம் இதில் காணப்பட்டது. இது போன்ற உயிரினம் தோன்றுவதும், மக்களின் பார்வைக்கு கிடைப்பதும் மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.இதனை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்தார்.
Rare polka-dotted zebra foal spotted in Maasai Mara - பிபிசி வெளியிட்ட ஆண்டனி டிராவின் வீடியோ
அந்த புகைப்பட குழுவுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட ஆண்டனி டிரா இந்த வரிக்குதிரையின் போக்கினை சில காலமாகவே கண்டறிந்து அதனை வீடியோவாக ஆவணம் செய்து வைத்திருக்கிறார். பிபிசியில் வெளியான அவரது வீடியோ.
இந்த வரிக்குதிரைக்கு டிரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கருப்பு நிறத்தின் அதிகரிப்புக்கு காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது ”அவை மனித உடலில் கருமை நிறத்துக்கு காரணமாக அமையும் அதே மெலனின் சுரப்பியின் அளவு இந்த வரிக்குதிரையில் அதிகமாக இருப்பதன் காரணம் தான்” என்று கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.