ஜ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்?

சிரியாவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலின் போது ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி தலைவர் கொல்லப்பட்டிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சிரியாவில் ரக்கா பகுதியில் கடந்த மே மாத இறுதியில் ரஷ்ய ராணுவம் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி தலைவர் கொல்லப்பட்டிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பாக்தாதி உயிரிழந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close