வெளிநாட்டவர்களுக்கு சவுதி வைத்த 'செக்'; பெட்டியைக் கட்டும் மனைவிகள்!

சவுதி அரேபியாவில் 41 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். மற்ற வெளிநாட்டவர்களைக் காட்டிலும், அங்கு இந்தியர்களே அதிகளவில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடும்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பு கொள்கை வரும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

அதாவது, சவுதியில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களின் மாத வருமானம் 5,000 ரியால் (86,000 ரூபாய்) என இருந்தால் மட்டுமே, அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் அங்கு வசிக்க அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் குடும்பத்துடன் சவுதியில் குடியேற முடியாது.

தற்போது சவுதி விதித்துள்ள புதிய வரி உத்தரவின்படி, அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் (1,700 ரூபாய்) வரியாக வசூலிக்கப்படும். அதுமட்டுமன்றி 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதனால், வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கினை வரியாகவே அவர்கள் செலுத்த நேரிடும். இதனால், சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தை பேக்கிங் செய்து இந்தியா அனுப்பி வருகின்றனர்.

×Close
×Close