பெண்கள் இறுக்கமான, லேசான ஆடைகளை அணிய தடை : சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு

சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களில் பயணிக்கும் பெண் பயணிகள் இறுக்கமான, கால், கைகள் தெரியும் உடைகளை அணியக்கூடாது என கடுமையான ஆடை விதிமுறைகளை அறிவித்தது.

By: Updated: August 10, 2017, 04:53:45 PM

சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் விமானங்களில் பயணிக்கும் பெண் பயணிகள் இறுக்கமான, கால், கைகள் தெரியும் உடைகளை அணியக்கூடாது என கடுமையான ஆடை விதிமுறைகளை அறிவித்தது. ஆண்களுக்கும் ஆடை கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் அறிவித்தது.

ஆண், பெண் இருபாலருக்குமான கடுமையான ஆடை கட்டுப்பாடுகளை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் விதித்து அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், பயணிகள் சக பயணிகளை புண்படுத்தும் விதத்திலும், அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அந்த கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டது.

சவுதியில் பெண்கள் தங்கள் விருப்பப்படி நீச்சல் உள்ளிட்ட எந்த ஆடைகளையும் அணியும் வகையில் கடற்பகுதியில் ரெசார்ட் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியான சில நாட்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில், பெண்கள் தங்கள் கால்கள், கைகள் ஆகியவை தெரியும் வகையிலும், தங்கள் உடல்பாகங்கள் வெளியே தெரியும் வகையில் லேசான துணியிலான அடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணியக்கூடாது என ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது. ஆண்களுக்கு கால்கள் தெரியும் வகையில் குட்டை கால்சட்டைகளை அணியக்கூடாது என அறிவித்தது. இந்த விதிமுறைகளை மீறும் பயனிகளை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்களில் ஏற்றாது எனவும், அவர்களை அங்கிருந்து இறக்கிவிடவும் அந்நிறுவனம் முடிவு செய்தது.

அந்நாட்டின் சுற்றுலா மற்றும் சுகாதார துறையின் முன்னாள் தலைவர் கூறுகையில், சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல சர்வதேச விமான நிறுவனங்கள் அவர்களுக்கேற்ப ஆடை விதிமுறைகளை புகுத்துகின்றன என குறிப்பிட்டார்.

இந்த விதிமுறைகள் அறியாத புதிய பயணிகள் விமான நிலையத்திலேயே புதிய ஆடைகளை வாங்கவும், அல்லது அவர்களுடைய விமான டிக்கெட்டை ரத்து செய்யவும் நேரிடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Saudia airlines rules out tight revealing clothes in new dress code

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X