இந்தியாவுக்கு எதிரான 'எஸ்பி 509' மசோதா: கலிஃபோர்னியா ஆளுநர் நியூசோம் கையெழுத்திட மறுத்தது ஏன்?

மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் அன்னா கபாலேரோ, "வெளிநாட்டு அரசாங்கங்களால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்த சமூகங்களைப் பலப்படுத்துவதற்கான புதிய சட்டம்" என்று இதைப் பிரபலப்படுத்தினார்.

மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் அன்னா கபாலேரோ, "வெளிநாட்டு அரசாங்கங்களால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்த சமூகங்களைப் பலப்படுத்துவதற்கான புதிய சட்டம்" என்று இதைப் பிரபலப்படுத்தினார்.

author-image
abhisudha
New Update
Gavin Newsom

California Governor Gavin Newsom declined signing the controversial Senate Bill 509,

கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், இந்திய வம்சாவளி சமூகத்தினரிடையே மிகப்பெரிய பிளவையும், விவாதத்தையும் ஏற்படுத்திய செனட் மசோதா 509 (SB 509)-க்கு கையெழுத்திட மறுத்துள்ளார். இந்த முடிவானது, இந்திய-அமெரிக்க சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே நிம்மதியையும், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினரிடையே ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

Advertisment

எஸ்பி 509 மசோதா

செனட் உறுப்பினர் அன்னா கபாலேரோ அறிமுகப்படுத்திய இந்த மசோதாவின் பெயர், "சர்வதேச அடக்குமுறை பயிற்சி" (Transnational Repression Training) மசோதா. இது நிறைவேறியிருந்தால்:

சட்ட அமலாக்கப் பயிற்சி: கலிஃபோர்னியாவில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள், "சர்வதேச அடக்குமுறையை" (Transnational Repression) அடையாளம் கண்டு பதிலளிப்பதற்கான சிறப்பான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச அடக்குமுறை என்றால் என்ன? வெளிநாட்டு அரசாங்கங்கள், தங்கள் சொந்த நாட்டிற்கு வெளியே வாழும் எதிர்ப்பாளர்கள், ஆர்வலர்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரை அச்சுறுத்துவது, துன்புறுத்துவது, அல்லது உடல் ரீதியாகத் தாக்குவது போன்ற செயல்களை இது குறிக்கும்.

Advertisment
Advertisements

இந்த மசோதா தங்களை குறிவைக்கும் என்று இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்பினர். காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு அரசாங்கத்தின் 'முகவர்கள்' எனத் தவறாக முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது.

சீக்கிய சமூகத்தின் ஒரு பகுதியினர், குறிப்பாக காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர்கள், இதை இந்தியாவுக்கு எதிராக கூறப்படும் அரசியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் ஒரு சட்டமாகப் பார்த்தனர்.

மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் அன்னா கபாலேரோ, "வெளிநாட்டு அரசாங்கங்களால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்த சமூகங்களைப் பலப்படுத்துவதற்கான புதிய சட்டம்" என்று இதைப் பிரபலப்படுத்தினார்.

ஆளுநர் நியூசோம் ஏன் நிராகரித்தார்?

அக்டோபர் 13 (அமெரிக்க நேரம்) அன்று, தனது 'வீட்டோ' செய்தியில், நியூசோம் ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியாக இருந்தபோதிலும், இந்த மசோதாவை ஏன் ஏற்கவில்லை என்பதற்கான "காரணங்களைப்" பட்டியலிட்டார்:

கூட்டரசு ஒருங்கிணைப்பு தேவை: இந்த மசோதாவின் நோக்கம் சர்வதேச அடக்குமுறையை அடையாளம் கண்டு மாநிலத்தின் திறனை மேம்படுத்துவதாக இருந்தாலும், கூட்டரசு (Federal) நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

வரையறையில் குழப்பம்: சர்வதேச அடக்குமுறைக்கு என பொதுவான கூட்டாட்சி வரையறை இல்லாத நிலையில், இந்த மசோதாவுக்குச் சட்டப்பூர்வ வரையறைகளை வழங்குவது, மாநிலத்தில் நெகிழ்வுத்தன்மையை நீக்கிவிடும் என்றும், எதிர்காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மசோதா நிராகரிப்புக்கு எதிர்வினைகள்

ஆளுநரின் இந்த முடிவுக்கு வெவ்வேறு சமூகங்களிடமிருந்து வேறுபட்ட எதிர்வினைகள் கிடைத்துள்ளன:

வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி (CoHNA) மற்றும் இந்து அமெரிக்க அறக்கட்டளை (HAF) ஆகியவை ஆளுநரின் முடிவை ஒரு "வெற்றி" என்று வரவேற்றன.

இந்து அமெரிக்க அறக்கட்டளை கருத்துப்படி, "பயங்கரவாதத்துடன் தொடர்புடைய காலிஸ்தான் இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களை வெளிநாட்டு அரசாங்கத்தின் 'முகவர்கள்' என்று இந்த மசோதா தவறாக வரையறுக்க வாய்ப்பிருந்தது," இது நீக்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது, என்று கூறியது.

சீக்கிய சமூகத்தின் ஏமாற்றம்

கலிஃபோர்னியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குருத்வாராக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்திருந்தன. இதனால், சீக்கிய கூட்டணி (Sikh Coalition) போன்ற முக்கிய அமைப்புகள் ஆளுநரின் முடிவால் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தின.

"சர்வதேச அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். மசோதா தோல்வியுற்றாலும், எங்கள் சமூகத்தின் பலம் மறுக்க முடியாதது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் ஜஸ்மீத் பெயின்ஸ் ஆவேச விமர்சனம்

சீக்கிய-அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரும், மசோதாவின் இணை ஆசிரியருமான டாக்டர் ஜஸ்மீத் பெயின்ஸ், ஆளுநரை கடுமையாக விமர்சித்தார்.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் (SB 403) மசோதாவை ஆளுநர் நிராகரித்தார். இப்போது சர்வதேச அடக்குமுறையிலிருந்து கலிஃபோர்னியா மக்களைப் பாதுகாக்கும் சட்டத்தையும் மறுத்துவிட்டார். 1984 சீக்கிய இனப்படுகொலையை அங்கீகரிக்க அவருடைய கையெழுத்து தேவையில்லை என்பதில் மகிழ்ச்சி," என்று கூறி ஆளுநரின் முந்தைய முடிவுகளையும் நினைவுபடுத்தினார்.

மொத்தத்தில், எஸ்பி 509 மசோதாவை ஆளுநர் நியூசோம் நிராகரித்திருப்பது, அமெரிக்க மண்ணில் இந்தியச் சமூகங்களிடையே நிலவும் இந்து-சீக்கிய பிளவையும், சர்வதேச அரசியல் அழுத்தங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

California

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: