பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் தேர்வு!

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாஸி கட்சி மேலிடத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் அப்பாஸி கட்சி மேலிடத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ஹகான் தேர்வு!

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததால் சிறப்பு கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Advertisment

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நடத்தும் எனவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீப் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப்பை (வயது 65), புதிய பிரதமராக்க அக்கட்சி மேலிடம் முடிவு எடுத்தது. ஷாபாஸ் ஷெரீப் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் உடனடியாக அவரால் பிரதமர் பதவி ஏற்க முடியாது. அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும். அதற்கு 45 நாட்கள் ஆகும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த இடைப்பட்ட காலத்திற்கு, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் ககான் அப்பாஸியை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாகவும், ஷாபாஸ் ஷெரீப் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகும் வரை அப்பாஸி இடைக்கால பிரதமராக செயல்படுவார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Nawaz Sharif Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: