இது எப்படி சாத்தியம்? ரொம்ப கன்ஃப்யூஸ் பண்றாங்களே! உங்களுக்கு எதுவும் வெளங்குதா?

’நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்' என்று சொல்ல, மகிழ்ச்சியில் கூச்சலிட்டு இருக்கிறார் லிசா. ஆனால், அடுத்ததாக மருத்துவர்கள் சொன்னது லிசாவை அதிர வைத்துள்ளது

’நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்' என்று சொல்ல, மகிழ்ச்சியில் கூச்சலிட்டு இருக்கிறார் லிசா. ஆனால், அடுத்ததாக மருத்துவர்கள் சொன்னது லிசாவை அதிர வைத்துள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
mother 2

இங்கிலாந்தின் ப்ளிம்ப்டன் நகரைச் சேர்ந்த லிசா, கடந்த 2014ம் ஆண்டு வழக்கம் போல தனது அலுவலக பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.

Advertisment

சிறிது நேரத்தில் வயிறு வலிப்பது போல அவர் உணர, நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்து இருக்கிறது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருக்கிறார் லிசா.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 'நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்' என்று சொல்ல, மகிழ்ச்சியில் கூச்சலிட்டு இருக்கிறார் லிசா. ஆனால், அடுத்ததாக மருத்துவர்கள் சொன்னது தான் லிசாவை அதிர வைத்துள்ளது. நம்மையும் தான்.

mother

Advertisment
Advertisements

மருத்துவர்கள் அவரிடம். 'இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது' என்று கூறியிருக்கிறார்கள். ('படிக்காதவன்' படத்தில் தலைவர் அம்பிகாவின் பிரசவ வயிறாய் பார்த்து யோசிப்பாரே...! தட்... சேம் மொமண்ட்).

மருத்துவர்கள் சொன்னது போல், அடுத்த 45 மணி நிமிடங்களில் லிசாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இருங்க.. இருங்க.... அது எப்படி, இது எப்படி-னு நீங்க கேட்குற மாதிரி நம்மிடமும், நிறைய கேள்விகள் ஹெவியாக இருக்கிறது. ஆனால், கேட்கத் தான் முடியவில்லை.

மூன்று வருடங்களுக்கு பிறகு, லிசா தற்போது இச்சம்பவம் குறித்து பேசியுள்ளார். இப்போது அவருக்கு வயது 38. அதற்கு பிறகு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார் லிசா.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: