நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்; அனைவரது பார்வையும் கோத்தபய ராஜபக்சே மீது...

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு நடைபெற்று 7 மாதங்களுக்குப் பிறகு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தல் 2015 ஆம் ஆண்டு...

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு நடைபெற்று 7 மாதங்களுக்குப் பிறகு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தல் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்ட ஒன்று.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெறுவற்கு ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக பொதுமக்களின் கோபத்தை தூண்டிய மைத்ரிபால சிறிசேனா இந்த தேர்தல் களத்தில் இல்லை. மேலும், இந்தமுறை முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் தம்பியும் ஆவார்.

எதிர்க்கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சே பெரும்பான்மை சிங்களவர்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றிருப்பதாகக் காணப்படுகிறது. ஆனால், மற்றொரு முக்கிய போட்டியாளரான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா ஒரு நல்ல அரசியல்வாதி என்ற வகையில் அனைவரிடமும் கணிசமான நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்சே ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அவர் ஒரு ஒழுக்கமான மனிதர் என்றும் தீவிர கொள்கை சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பும் தொழில்நுட்ப வல்லுநராகவும் பார்க்கப்படுகிறார்.

சஜித் பிரேமதாசா, 1993 இல் எல்.டி.டி.இ தற்கொலை குண்டுவெடிப்பால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகன் ஆவார்.

வருகிற திங்கள்கிழமைக்கு முன்னரே முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதால், இருதரப்பும் கொழும்பு தேர்தல் களத்தில் அணிவகுத்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி அவர்களின் இருப்புக்கு எதிராக சமூகத்தில் மாற்றமுடியாத மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்ற அச்சம் உள்ளது” என்று தமிழ் கவிஞர் ஷர்மிளா செய்யித் கூறினார். அவர் தனது தாயார் வாக்களிப்பதற்காக மட்டக்களப்புக்கு வருவதாகவும் கூறினார்.

கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும் என்று டாக்ஸி டிரைவர் ஜனகா மாதவா கூறினார். “ராஜபக்சே குடும்பம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் குண்டுவெடிப்பு நடந்திருக்காது” என்றும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாசா சிறந்த வேட்பாளர் என்று உணவு விநியோக ஊழியராக பணிபுரியும் காஞ்சனா பத்மசிறி கூறினார். “ஆனால், அவர் தவறான இடத்தில் இருக்கிறார். அவர் நல்லவராக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் கண்டது போல, ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் அவரது அரசாங்கத்தை கெடுக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

இந்த தேர்தல் நாட்டின் எதிர்கால ஜனநாயகத்தையும் நாட்டின் சமூக வெளியையும் தீர்மாணிக்கும் என்று எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேரா கூறினார். “கோத்தபய ராஜபக்சேவின் பிரசாரம் தேசிய பாதுகாப்பைச் சுற்றியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு என்பது கண்காணிப்பு, உளவுத்துறை மற்றும் ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதாகும்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு சாதகமான பல காரணிகள் இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் கூறினார். “தமிழர்கள் 2015 இல் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், சிறிசேனா அரசாங்கத்தில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) அரசாங்கம் அவர்களுக்காக எதுவும் செய்யாததால் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. பல சாதாரண தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மேலும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு போல வாக்களிக்கக் கூடாது”என்று செயல்பாட்டாளர் கூறினார்.

மேலும், “கோத்தபய ராஜபக்சே மீது பாரிய கொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டால், சஜித் பிரேமதாசாவும் இதேபோன்ற மரபைக் கொண்டுள்ளார். அவரது தந்தையின் அரசாங்கம் 1980 -களில் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி) நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை அழித்தது. இரண்டுமே பெரும்பான்மையின் கருத்துகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சஜித் பிரேமதாசா ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்கலாம், கோத்தபய ராஜபக்சே ஒரு நன்றாக செயல்படுபவராக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

கோத்தபய ராஜபக்சேவின் வாக்கெடுப்பு பிரசாரத்தை வடிவமைத்த விளம்பர நிறுவனமான டி.ஆர்.ஐ.ஏ.டி -யின் திலித் ஜெயவீரா “ அவர் 59 சதவீத வாக்குகளை எளிதில் பெறுவார்” என்று கூறினார். அரசாங்கத்திற்கு ஆதரவாக பொதுக் கருத்தை உருவாக்குவதில் டி.ஆர்.ஐ.ஏ.டி நிறுவனம் போரின்போது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

தன்னுடைய 210 உறுப்பினர்களைக் கொண்ட அணிக்கு ஒன்றரை மில்லியன் புதிய வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் இடையே உரையாற்றுவது சவாலாக இருந்தது என்று ஜெயவீரா கூறினார். “நாங்கள் மற்ற சமூகங்களிடையே அவர்களுடைய மொழியில் பிரச்சாரத்தை செய்துள்ளோம்” என்றும் அவர் கூறினார். 45 விநாடிகள் உள்ள ஒரு தமிழ் விளம்பரத்தில், கோத்தபய ராஜபக்சே புன்னகைத்தபடி குழந்தைகளிடமிருந்து பூக்களைப் பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. “கோத்தபய ராஜபக்சே ஒரு செயல்பாட்டாளர் என்பதை மக்கள் அறிவார்கள். சாம பீமா (அனைவருக்கும் சமமான நாடு) அவருடைய வாக்குறுதியாகும்” என்று ஜெயவீரா கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close