உலகின் முதல் மாற்றுத் திறனாளிகள் "வாட்டர் தீம் பார்க்": புகைப்படங்கள் இணைப்பு

மாற்றுத் திறனாளிகளின் ஏக்கத்தை போக்கும் விதமாக உலகின் முதல் பிரத்யேக "வாட்டர் தீம் பார்க்" திறக்கப்பட்டுள்ளது.

நீரின்றி அமையாது உலகு என்பர்!! நீரில் விளையாட விரும்பாத யாரும் இலர்.!! தண்ணீர் விளையாட்டு என்றால் நம் அனைவருக்குமே கொள்ளை பிரியம் தான். வாட்டர் தீம் பார்க் சென்றால் தண்ணீரில் விளையாடி, விளையாடி உடல் அலுத்தாலும் மனம் அலுக்காது.

ஆனால், உடல் மாற்றத்தினால் ஏற்படும் இயலாமை காரணமாக மாற்றுத் திறனாளிகள் சிலரால் தண்ணீர் ரைடுகள் உள்ளிட்ட சில ரைடுகளை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம். அவர்களுடைய ஏக்கத்தை போக்கும் விதமாக மாற்றுத் திறனாளிகளுக்கான உலகின் முதல் பிரத்யேக “வாட்டர் தீம் பார்க்” திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டனியோவில் இந்த தீம் பார்க் திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை முழுவதும் கருத்தில் கொண்டு மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 17 மில்லியன் டாலர் செலவில் இந்த பார்க்கை தொழிலதிபர் கார்டன் ஹார்ட்மேன் என்பவர் கட்டியுள்ளார். இந்த தீம் பார்க்கில் எந்த இடத்திற்கும் சக்கர நாற்காலிகளில் செல்லும் வசதி உள்ளது. மேலும், தண்ணீர் விளையாட்டுகளை முழுமையாக அனுபவிக்கும் வகையில் அனைத்து விளையாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தனது மகள் மோர்கன் பெயரில் “மோர்கன்ஸ் வொண்டர்லேண்ட்” எனும் பெயரில் இந்த பூங்காவை ஹார்ட்மேன் கட்டியுள்ளார். தண்ணீர் விளையாட்டுகளை சாதாரண குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடும் போது, உடல் மாற்றம் காரணமாக அதில் விளையாட முடியாமல் ஏங்கிய தனது மாற்றுத் திறனாளி மகளின் ஏக்கத்தை போக்கும் விதத்திலும், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் பயன்படும் விதத்திலும் இந்த பூங்காவை கட்டியுள்ளதாக ஹார்ட்மேன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தன்னிடம் உள்ள பணத்தை வைத்து, மருத்துவர்கள், சிகிச்சையாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் உதவியுடன் இந்த பார்க்கை ஹார்ட்மேன் கட்டியுள்ளார். இந்த பார்க் கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. இங்கு வருவோர் மகிழ்ச்சியுடன் தங்களது பொழுதை கழித்தும், ஏக்கத்தை போக்கியும் வருகின்றனர்.

That smile says it all! ???? Thanks for sharing, @andreaemitchell. ・・・ Loving life @morganswonderlandtexas #inspirationisland

A post shared by Morgan’s Wonderland (@morganswonderlandtexas) on

×Close
×Close