இதல்லவா மனிதநேயம்... வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள்!

இளைஞர்கள் மூவரும் இணைந்து அந்த நாயை காப்பாற்றியுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நாய் ஒன்றை இளைஞர்கள் சில உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பொதுமக்கள் பலரும் பாதுக்காப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. மனித உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் சிதறியடித்து ஓடிய போது, அவர்களின் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்ற முடியாமல் பலரும் தவித்தனர்.

இந்நிலையில், மூன்று இளைஞர்கள் துணிச்சலாக வெள்ளத்தில் சிக்கி கத்திய நாய் ஒன்றை தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியயுள்ளனர். அவர்கள் மூவரும் கூட்டாக வெள்ளத்தை கடந்து சென்றுள்ளனர். அப்போது நாய் ஒன்று பயத்தில் கத்தியபடியே வெள்ளத்தில் அடித்து சென்றது. அதைப்பார்த்த இளைஞர்கள் மூவரும் இணைந்து அந்த நாயை காப்பாற்றியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

×Close
×Close