அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய் கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது, சமகால இந்தியா மற்றும் உலகின் மிகப்பெரும் மக்களாட்சியாக கூடுதலாக முன்னேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ராகுல் காந்தி பேசினார். பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, அரசின் வெளியுறவு கொள்கைகல், காஷ்மீர் நிலவரம் இவற்றால் ஏற்படும் தாக்கம் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு முன்னால் உள்ள சவால்களை எடுத்துரைத்தார்.
Advertisment
மேலும், 2002-ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றையும் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டபோது பழங்குடியின மக்கள் ஒருவர் கூட இறக்கவில்லை எனவும், அவர்களுக்கு சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் எப்போது நிகழும் என்ற முன்னறிவு இருக்கும் எனவும் தெரிவித்தார். அதனால், அன்றைய நாளில் அவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை எனவும், இதனை மற்றவர்களுக்கும் அவர்கள் அறிவுறுத்தியதாக ராகுல் காந்தி கூறினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையால் சிதறடிக்கப்பட்டு விடும் என நினைத்தவர்கள் மத்தியில், நேரு, இந்திராகாந்தி, காந்தி ஆகியோரின் கொள்கைகளால் நிலைத்திருக்கிறது என கூறிய ராகுல் காந்தி, காந்தியின் அகிம்சை கொள்கை குறித்து விளக்கினார்.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் ஜி.டி.பி. 2 சதவீதம் சரிந்துள்ளது எனவும், மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை எனவும் ராகுல் காந்தி கூறினார்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி நிகழ்த்திய முழு உரை.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, கடந்த 1949-ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.