ஐநா பொதுச்சபையில் 72-வது ஆண்டு கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு நேற்று உரையாற்றினார். இந்தியா ஐஐடி, ஐஐஎம்எஸ், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ள நிலையில், பாஜிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதின் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். இந்த உரையின்போது, பாகிஸ்தான் என்பதை 15 முறையும், தீவரவாதம் குறித்த வார்த்தையை 17 முறையும் உச்சரித்தார். கடந்த ஆண்டு உரையின்போது, பாகிஸ்தான் என 5 முறை உச்சரித்த சுஷ்மா, தீவிரவாதம் என 18 முறை உச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சுஸ்மா ஸ்வராஜ் உரையில் தெரிவிக்கும்போது: நாங்கள்(இந்தியா) ஆராய்சியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், போன்றோரை உருவாக்கி வருகின்றோம். ஆனால், நீங்கள் உருவாக்கியது என்ன? நீங்கள் உருவாக்கிதெல்லாம் தீவிரவாதிகளை தான். மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுகின்ற வேளையில், மற்றொரு புறம் தீவிரவாதிகள் உயிர்களை பலி வாங்குகின்றனர். இந்தியா ஐஐடி, ஐஐஎம்எஸ், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ள நிலையில், பாஜிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதின் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.
தற்போது தீவிரவாதம், வன்முறை ஆகிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் செலவிடம் பணத்தை, நாட்டுமக்களுக்காக பாகிஸ்தான் பயன்படுத்த வேண்டும் என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நேரத்திர மோடி, சுஸ்மா ஸ்வராஜ்-க்கு பாராட்டு தெரிவித்தார்.மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஏன் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கு சுஸ்மா ஸ்வராஜ் வலிமையான கருத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாஜிஸ்தான் பிரதமர், காஷ்மீர் பகுதியில் மனித உரிமைகள் நடப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.