scorecardresearch

கொலம்பியாவில் மண்சரிவு: 14 பேர் பலி, 35 பேர் காயம்

அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன.

கொலம்பியாவில் மண்சரிவு: 14 பேர் பலி, 35 பேர் காயம்

தென் அமெரிக்க நாடான கொம்பியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.

கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.

மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: World heavy rains mudslide colombia killed more than ten