Advertisment

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த நாடுகள்… சைபர் தாக்குதல் நடத்திவரும் நாடு... டாப் 5 உலகச் செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷியாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அவர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தகவல்.

author-image
WebDesk
New Update
வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த நாடுகள்… சைபர் தாக்குதல் நடத்திவரும் நாடு... டாப் 5 உலகச் செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த நாடுகள்…

Advertisment

வரும் 9-ஆம் தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சுவீடன் அனுமதி அளித்துள்ளது.

இதேபோல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

சுவீடன் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இநத நிலையில், அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கூட்டத்தின் முடிவில், வருகிற 9 ஆம் தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி அளிப்பது என முடிவானது.

கொரோனா தடுப்பூசி செலுத்துதல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்த முடிவு எடுக்ப்பட்டு உள்ளது. 

ரஷியா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷியாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷியாவுக்கு செல்ல  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அவர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், இந்த பயணத்தின்போது அவர் அதிபர் புதினை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாக இருக்கும். ரஷியா-உக்ரைன் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் இம்ரான்கானின் இந்த ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் புதின், இம்ரான்கான் ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகம் முழுவதும் 39.79 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை  57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். 

அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 1,123 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  

ஒரே நாளில் பிரான்சில் 46 ஆயிரம், ஜெர்மனியில் 1.38 லட்சம், ரஷ்யாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  

பாகிஸ்தானில் வேலையில்லா இளைஞர்கள் 31 சதவீதம்: அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் வேலையில்லா இளைஞர்கள் 31 சதவீதம் பேர் உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகையில் 60 சதவீதத்திலானோர் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர்.  அவர்களில் பலர் வேலையின்றி உள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு பொருளாதார முன்னேற்ற மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் நடப்பு வேலையற்றோர் விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

அந்நாட்டில், 31 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.  அவர்களில் பலர் தொழில்முறை பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.  அவர்களில் 51 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் 16 சதவீதத்தினர் ஆண்கள் ஆவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



சைபர் தாக்குதல் நடத்துகிறது வடகொரியா..! ஐ.நா. அமைப்பு குற்றச்சாட்டு

அடிக்கடி ஏவுகணை சோதனை செய்வதற்காக சைபர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடிப்பதாக வடகொரியா நாட்டின் மீது ஐநா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதிலும் அந்நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது.

இந்நிலையில், வடகொரியா பல நாடுகளின் நிதி நிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதை கொண்டு ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக ஐநா கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment