கடலின் மீது அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான பாலம் இது தான்

55 கிமீ நீளம்... ஒரு நாளைக்கு 5000 கார்கள் மட்டுமே அனுமதி....

55 கிமீ நீளம்... ஒரு நாளைக்கு 5000 கார்கள் மட்டுமே அனுமதி....

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
World's Longest Sea Bridge

World's Longest Sea Bridge

World's Longest Sea Bridge : கடல் மீது அமைக்கப்பட்டிருக்கும் மிகவும் நீளமான பாலம் இந்த பாலம் தான். அக்டோபர் 24ம் தேதி இதன் திறப்பு விழா. அதிக அளவு பண முதலீட்டில் 2009ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டிட வேலை தொடங்கப்பட்டது. சுமார் 55 கிமீ நீளமுள்ள இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான, கடலுக்கு மேலே அமைக்கப்பட்ட பாலமாகும்.

Advertisment

ஹாங்காங்கில் இருந்து ஜூஹாய் மாகாணத்திற்கான பயணம் மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் இந்த பாலத்தினை பயன்படுத்தினால் வெறும் முப்பது நிமிடங்களில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்துவிட இயலும். To read this article in English

World's Longest Sea Bridge

ஹாங்காங் - ஜுஹாய் - மக்காவ் மார்க்கத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தினை பொதுமக்கள் அக்டோபர் 24ம் தேதியில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

ஹாங்காங் மாகாண அதிகாரிகள், இந்த பாலம் நேரடியாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயண தூரத்தை குறைப்பதால் மக்கள் மற்றும் போக்குவரத்து அடர்த்தியாக இருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஒரு நாளைக்கு 5000 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று கூறியிருக்கிறது ஹாங்காங் போக்குவரத்து மையம்.

China

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: