உலகிலேயே மிக அதிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கிரிஸ்டல் என்பவர் காலமானார். அவருக்கு வயது 113.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டல் என்பவருக்கு 113 வயதாகிறது. இவர் கடந்த மார்ச் மாதம் 2016-ஆம் தேதி, 112-வது வயதில், உலகிலேயே அதிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். இந்நிலையில், 113 வயதான இவர் வெள்ளிக்கிழமை காலமானார்.
போலந்து நாட்டில் 1903-ஆம் ஆண்டு, செப்டம்பர் 15-ஆம் தேதி கிரிஸ்டல் பிறந்தார். ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் ஆஸ்ச்விட்ஸ் சித்திரவதைக் கூடத்தில் பல இன்னல்களை அனுபவித்த அவர் மரணத்திலிருந்து தப்பித்தார். இரண்டாம் உலகப்போரின்போது, சுமார் 1.3 மில்லியன் பேர் ஆஸ்ச்விட்ஸ் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அதில், 9,60,000 யூதர்கள் உட்பட சுமார் 1.1 மில்லியன் பேர் இறந்திருப்பர். இந்த சித்திரவதைக் கூடத்தில், கிரிஸ்டலின் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். இதன்பின், கிரிஸ்டல் கடந்த 1950-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்று மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த மார்ச் 11, 2016-ஆம் ஆண்டு, 112-வது வயதில் கிரிஸ்டல் உலகிலேயே மிக அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
இந்நிலையில், தன் 113-வது வயதில் கிரிஸ்டல் வெள்ளிக்கிழமை காலமானார்.
ஃபிரான்ஸை சேர்ந்த ஜேன் கால்மெண்ட் என்ற பெண், கடந்த 1997-ஆம் ஆண்டு தன் 122-வது வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.