இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்!

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று உலகம் முழுவதும் பெண்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

By: October 11, 2017, 12:14:48 PM

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஆறாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.

இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:12 feminist quotes to share on international day of the girl

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X