திருமணங்களின்போது பல சம்பிரதாய சடங்குகள் இருக்கும். தனிநபர்களி சாதி, மதம் உள்ளிட்டவை பொறுத்து இந்த திருமண சடங்குகள் மாறுபடும். இந்தியாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே இத்தகைய திருமண சடங்குகள் உள்ளன. அதில், சில சடங்குகள் உங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கும். அப்படிப்பட்ட சில சடங்குகள் இதோ:
1. மணப்பெண்ணின் மீது அம்பு எறிதல்:
சீனாவில் உள்ள யூகர் பழங்குடிகளின் திருமணத்தில், மாப்பிள்ளை மணப்பெண் மீது 3 முறை அம்பு எறிய வேண்டும். அந்த அம்பு கூர்மையானதாக இல்லாவிட்டாலும், 3 முறை தொடர்ந்து எம்பு எறியப்படுவதால் பல சமயங்களில், மணப்பெண்ணுக்கு காயங்கள் ஏற்படுவதுண்டு.
2. எச்சில் உமிழ்தல்:
கென்யாவில் உள்ள மாசாய் பழங்குடிகளின் திருமணத்தின்போது, மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் தலையிலும், மார்பகம் மீதும் எச்சில் உமிழ வேண்டும்.
3. உறவினர்கள் கம்பளமாக வேண்டும்:
ஃப்ரெஞ்சு பாலினேசியாவில் பல தீவுகள் உள்ளன. அதில், மார்க்யூசஸ் தீவில் யாருக்கேனும் திருமணம் நடைபெற்றால், மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் தரையில் கம்பளம் போன்று படுக்க வேண்டும். திருமணம் முடிந்ததும் அவர்கள் மீது, திருமண ஜோடிகள் நடந்து செல்வர்.
4. அழுகிய உணவுப்பொருட்களால் தம்பதிக்கு அபிஷேகம்:
ஸ்காட்லாந்தில் திருமணமான தம்பதியின் மீது அழுகிய உணவுப்பொருட்கள் மற்றும் மீன்களை வீசுவார்கள்.
5. மணப்பெண் அழ வேண்டும்:
சீனாவில் உள்ள துஜியன் பழங்குடியில் திருமணத்திற்கு முன்பு ஒரு மாத காலமாக, மணப்பெண் அழுதுகொண்டே இருக்க வேண்டும். உடனிருக்கும் மற்ற பெண்களும், மணப்பெண்ணுடன் இணைந்து அழுவார்கள்.
6. பெண்ணை கடத்திவந்து திருமணம்:
கஜகஸ்தானில் ஆண் தான் சேர்ந்து வாழ நினைக்கும் பெண்ணை கடத்திவந்துவிடுவர். அதன்பின், 2-3 நாட்களில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும். இதற்கு அந்நாட்டு பெண்ணியவாதிகள் பல காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
7. மணமகனுக்கு அடி:
தென்கொரியாவில், திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளையின் பலத்தை அறிய கட்டி வைத்து அடிப்பார்கள்.
8. மரத்தை திருமணம் செய்ய வேண்டும்:
இந்தியாவிலுள்ள மாங்லிக் சமூகத்தில், மணப்பெண் திருமணத்திற்கு முன்பு மரத்தை திருமணம் செய்ய வேண்டும்.
9. உயிரிழந்த ராணுவ வீரரின் கல்லறையில் திருமணம்:
ரஷ்யாவில் சிலர் மாஸ்கோவில் உள்ள இறந்த ராணுவ வீரரின் கல்லறையில் திருமணம் செய்துகொள்ளுவர்.
10. மணமகனின் ஆடை:
பப்புவா நியூ கினியில் திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை கவர, தங்கள் உடலில் வரைந்தும், பறவை இறகுகளையும் கட்டிக்கொள்ளுவர்.