ஒரு வீட்டை, பிரிண்ட் செய்வதை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா?
Advertisment
சென்னை ஐ.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாகியிருக்கும் 3டி இயந்திரம், இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது.
முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் கணினி தொழில்நுட்ப உதவியுடன் கட்டிடத்தின் வரைபடத்தை பல்வேறு பிரிவுகளாக பிரித்து ஒரு 3டி வடிவமாக அச்சடித்து வழங்குகிறது..
இதுகுறித்து DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
Advertisment
Advertisements
ஆர்கிடெக்ட்ஸ், கஸ்டமரோட தேவைகளுக்கு ஏத்தமாதிரி ஒரு மாடல் டிசைன் பண்ணுவாங்க..
அந்த மாடல்ல, கான்கிரீட்ல பிரிண்ட் பண்ண முடியுமான்னு அனலைசிஸ் பண்ணுவாங்க, ஸ்டிரக்ட்சுரல் வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு அது பிரிண்டிங்கு வரும். த்வஸ்தா சாஃப்ட்வேர்ல, மாடல்ல நீங்க இன்புட் பண்ணிட்டா, அது ஒவ்வொரு லேயரா நம்ம மாடல்ல வெட்டிக் கொடுக்கும்.
2டி-ல மெஷின் என்ன ஃபாலோ பண்ணுங்கிற டேட்டாவ, நம்ம சாஃப்ட்ஃபேர் கோட் வேர்டா கொடுக்கும், அந்த code எடுத்து, நம்ம மெஷின்க்கு ஃபீட் பண்ணும்போது, அந்த டிசைனை மெஷினை பிரிண்ட் பண்ணி கொடுக்கும் என்கிறார் இயந்திர வடிவமைப்பு பொறியாளர் சத்யா நாரயணன்.
இந்த வகை 3டி பிரிண்டட் வீடுகள், வழக்கமான கான்கிரீட் வீடுகளை போலவே உறுதியாகவும் தரமாகவும் இருக்கும் என த்வஸ்தா நிறுவனம் கூறுகிறது.
ஒரு வீடு முழுமையா கட்டி முடிக்க 6,8 மாசம் எடுக்கும். ஆனா 3டி பிரிண்டிங்ல ஒரு மாசத்துல வீட்டை கட்டலாம்.
ஏன்னா 3டி பிரிண்டட் பில்டிங்ஸ், 80 சதவீதம் ஆட்டோமெட்டிக் தான். முழுவதும் டிஜிட்டலைஸ்டு, இங்க மெஷின் தான் எல்லாமே பண்ணும்.
3டி பிரிண்டட் சுவர்ல, சாதரண சுவரை விட 40 சதவீதம் மெட்டீரியல் கம்மியா இருக்கும்., எலக்ட்ரீக் வயர்ஸ், பம்பிங், கனெக்ஷ்ன்ஸ் மற்ற வேலையெல்லாம் பிரிண்டிங் பண்ணும் போதே செய்ஞ்சிரலாம் என்று கூறுகிறார் கட்டிட வடிவமைப்பாளர் அங்கிதா பாப்….
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் த்வஸ்தா நிறுவனம், இந்தியாவின் முதல் முப்பரிமாண வீட்டை கட்டியிருக்கிறது. இந்த வீடு வெறும் 21 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வகை வீடுகளை கட்ட சுமார் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று த்வஸ்தா நிறுவனம் தெரிவிக்கிறது.
கட்டுமானத் துறையை இயந்திரமயமாக்கினால் குறைந்த நேரத்தில், தரமான உறுதியான அதிகமான வீடுகளை கட்ட முடியும், மூலப் பொருட்களுக்கு ஆகும் செலவுகளை, குறைக்க முடியும் என்றும் த்வஸ்தா கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“