காடுகளுக்கு பயணம் மேற்கொள்வது போன்று அலாதியான அனுபவம் வேறெதிலும் கிடைக்காது. விலங்குகள், தாவரங்கள், பறவைகள் என பல்லுயிர்களையும் பார்த்து பரவசம் அடையலாம். காடுகளுக்கு பயணிக்கும்போது திகிலாகத்தான் இருக்கும். ஆனால், உரிய பாதுகாப்புடன் சென்றால் மறக்க முடியாத நினைவுகளுடன் வீடுகளுக்கு திரும்பலாம். காடுகளில் நாம் தங்கவிருக்கும் ரெசார்ட்டுகள் மிக முக்கியம் அல்லவா? அப்படி நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய காடுகளில் உள்ள சில ரெசார்ட்டுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
1. தி பெஞ்ச் ட்ரீ லாட்ஜ், மத்திய பிரதேசம்:
தங்கும் கட்டணம்: ஒரு இரவுக்கு ரூ.20,000
எப்படி செல்வது? விமானம் அல்லது ரயில் மூலம் நாக்பூருக்கு சென்று அங்கிருந்து 150 கிலோமீட்டர் பயணித்தால் இந்த லாட்ஜை அடையலாம்.
பெஞ்ச் தேசிய பூங்கா மற்றும் காட்டுயிர் சரணாலயத்தில் இந்த லாட்ஜ் அமைந்துள்ளது. சாரீரி கிராமத்தில் பரந்து விரிந்திருக்கும் பெஞ்ச் தேசிய பூங்கா மற்றும் காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த லாட்ஜ், 6 மர வீடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மஹூவா மரங்களால் இந்த வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த லாட்ஜ் மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/b-300x169.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/b1-300x169.jpg)
2. தி கியாததேவரா குடி வைல்டர்னஸ் கேம்ப், பி.ஆர்.ஹில்ஸ், கர்நாடகா:
தங்கும் கட்டணம்:உணவுடன் சேர்த்து ரூ.7,649
எப்படி செல்வது? பெங்களூரிலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. கார் மூலம் பயணித்தால் 5 மணிநேரத்தில் இந்த லாட்ஜை சென்றடையலாம்.
காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த லாட்ஜின் மூலம், காடு முழுவதிலும் பயணித்த அனுபவத்தை நாம் பெற முடியும். பெரும்பாலும் அப்பகுதியில் மின்சார வசதி இல்லாவிட்டாலும், அங்கு நிலவும் சீதோஷ்ணத்திற்கு மின்சாரமே தேவையில்லை என தோன்றும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/k-300x201.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/k1-300x201.jpg)
3. ரெனி பானி ஜங்கிள் லாட்ஜ், சத்புரா புலிகள் சரணாலயம், மத்தியபிரதேசம்:
தங்கும் கட்டணம்: ஒரு இரவுக்கு ரூ.19,620
எப்படி செல்வது? போபாலில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த லாட்ஜ் அமைந்துள்ளது. ஹோஷங்காபாத் சாலையிலிருந்து கார் மூலம் அங்கு செல்லலாம்.
சத்புரா புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகிலேயே இந்த லாட்ஜ் அமைந்துள்ளது. 12 ஆடம்பரமான அறைகள் இங்குள்ளன. 3 விதவிதமான வடிவமைப்பில் இந்த அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/r-300x141.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/r1-300x141.jpg)
4. ட்ரீ ஹவுஸ் ஹைட்அவே, பந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்:
தங்கும் கட்டணம்: ஒரு இரவுக்கு ரூ.18,000
எப்படி செல்வது?போபாலில் இருந்து 462 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ரெசார்ட்டுக்கு மாநில நெடுஞ்சாலை 14-லிருந்து கார் மூலம் செல்லலாம்.
5 மர வீடுகளால் இந்த லாட்ஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு அறையும் நவீனமாக அமைக்கப்பட்டுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/t-300x182.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/t1-300x156.jpg)
5. கென் ரிவர் லாட்ஜ், பன்னா தேசிய பூங்கா, மத்திய பிரதேசம்:
தங்கும் கட்டணம்: ஒரு இரவுக்கு ரூ.10,000
எப்படி செல்வது? தேசிய நெடுஞ்சாலை 39 வழியாக கஜூராஹோ சென்று அங்கிருந்து 26 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த ரெசார்ட்டுக்கு செல்லலாம்.
பன்னா தேசிய பூங்காவில் 1645 சதுட கிலோமீட்டரில் இந்த ரெசார்ட் பரந்து விரிந்துள்ளது. 1986-ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. கென் ஆற்றை பார்த்தபடி இந்த ரெசார்ட்டில் தங்குவது இன்பமாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/p-300x163.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/08/p1-300x169.jpg)