இந்த 7 பிரபலங்களின் கைக்கடிகார விலையை கேட்டால் வாயை பிளப்பீர்கள்!

உங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோர், என்னென்ன கைக்கடிகாரத்தை உபயோகிக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

பிரபலங்கள், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் எல்லோருமே தங்களின் உடைமைகள் அனைத்திலும் பிரம்மாண்டமிக்கதாகவும், செலவுமிக்கதாகவும், மற்றவர்களை கவரும் விதமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக, கார், கைக்கடிகாரம், சன்-கிளாஸ் ஆகியவற்றை வித்தியாசமானதை வாங்கிகொள்வார்கள். அப்படி உங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோர், என்னென்ன கைக்கடிகாரத்தை உபயோகிக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

1. சச்சின் டெண்டுல்கர்: (பிக்கெட் கடிகாரம்)

சச்சின் எல்லாவற்றிலும் குறிப்பாக தேர்ந்தெடுக்கும் பழக்கமுடையவர். கார், கைக்கடிகாரம், ஆடைகள் எதுவாக இருந்தாலும் அவருடைய விருப்பம் பெஸ்ட்டாக இருக்கும். இதோ அவருடைய இந்த கைக்கடிகாரம் எல்லாவித வரியுடன் சேர்த்து ஒரு கோடி ரூபா. வாயைப் பிளக்கிறீர்களா?

2.மஹேந்திர சிங் தோனி: (லூப் ஆப்பிள் கடிகாரம்)

இவர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் மிகப்பெரும் ரசிகர். ஐஃபோன், லேப்டாப், ஐபாட் எல்லாமே இவரிடம் உண்டு. அதேபோல், ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களின் சேகரிப்புகளும் இவரிடம் பல உண்டு. தோனியின் 74,000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் இது.

3.ஷாருக்கான்: (டாக் ஹூவெர் கிராண்ட் கரேரா கடிகாரம்)

இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் ஷாருக்கான். இந்த நிறுவன கடிகாரம் என்றால் அவருக்கு கொள்ளைப்பிரியம். இந்நிறுவனத்தின் பல கடிகாரங்களை இவர் வைத்துள்ளார். கீழே பார்க்கும் ஷாருக்கானின் இந்த கடிகாரத்தின் விலை 5,00,050 ரூபாய்!

4. சயிஃப் அலிகான்: (ஜேகர் லெகோடர் வார்ல்ட் ஜியாக்ரஃபிக்):

சைஃபின் விருப்பமான கடிகாரத்தின் பட்டியலில் இணைந்திருக்கும் இந்த கைக்கடிகாரத்தின் விலை 6,60,908 ரூபாய்.!

5. ஹிருத்திக் ரோஷன்: (ரேடோ ஹைபர்க்ரோம் ஆட்டோமேட்டிக் க்ரோனோக்ராஃப்)

இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் ஹிருத்திக் ரோஷன். இதுதவிர ரோலக்ஸ், ஜேகர் லெகோடர் உள்ளிட்ட பல நிறுவன கைக்கடிகாரங்களை ஹிருத்திக் வைத்திருந்தாலும், இந்த நிறுவன கைக்கடிகாரமே அவருக்கு பிடித்தமானது. இதன் விலை 2,58,300 ரூபாய். அவர் முதன் முதலாக வாங்கிய கைக்கடிகாரம் இந்நிறுவனத்தினுடையது என்பதால் அவருக்குப் பிடித்தமான நிறுவனம் இதுவாகும்.

6. ரன்பீர் கபூர்: (டேக் க்ராண்ட் பிரிக்ஸ் எடிஷன்)

மிகவும் கிராக்கியுடைய இந்த கைக்கடிகாரம் மொத்தமே 2,500 மட்டும் தான் உலகம் முழுவதும் உள்ளது. அதில், ஒன்று ரன்பீர் கபூரிடம் உள்ளது. இதன் விலை சுமார் 4 லட்சம்.

7. அபிஷேக் பச்சன்: (ஒமேகா டெவில்)

அபிஷேக் பச்சனுக்கு தன் தந்தை அமிதாப்பச்சனிடமிருந்து கைக்கடிகாரம் மீதான இணக்கம் வந்திருக்கிறது. அமிதாப் பச்சன் லூக்ஸ் கைக்கடிகாரங்களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர். அபிஷேக்குக்கும் அந்நிறுவன கடிகாரங்களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்தான். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்த ஒமேகா டெவில் பிராண்ட் கைக்கடிகாரத்தின் விலை 7,31,500 ரூபாய்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close