வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அந்த பகுதிகளுக்கென பெயர்பெற்ற உணவு வகைகளை சாப்பிடாமல், பயணம் நிறைவுபெறாது. ஆனால், சில நாடுகளில் மனிதர்கள் சாப்பிடவே முடியாத வகையில் விநோதமான உணவு வகைகளெல்லாம் உண்டு. ஆனால், அது உள்ளூர் மக்களுக்கு பிடித்தமான, கலாச்சார ரீதியில் சிறந்த உணவாக இருக்கும். அப்படி, பயணிகளுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
1. செஞ்சுரி முட்டை, சீனா:
அவித்த முட்டையில் உப்பு, களிமண், சாம்பல் ஆகியவற்றை தடவி மாதக்கணக்கில் பாதுகாத்து வைக்கிறார்கள். அதன்பின், அதனை உண்கின்றனர். மாதங்கள் கழித்து அந்த முட்டை அடைந்திருக்கும் நிலை இதுதான். மஞ்சள் கரு கருமையாகவும், வெள்ளை கரு காவி நிறத்தையும் அடைந்திருக்கும்.
2. ஹாகீஸ், ஸ்காட்லாந்து:
செம்மறி ஆட்டின் இதயம், கல்லீரல் ஆகியவற்றை வெங்காயம், ஓட்ஸ், உப்பு, மசாலா பொருட்கள், மசித்த உருளைக்கிழங்கு, விஸ்கி ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் ‘புட்டிங்’ வகை உணவு.
3. தியெட் கான், வியட்நாம்:
வாத்தின் ரத்தத்தை ஃபிஷ் சாசுடன் கலந்து தயாரிக்கப்படும் உணவு வகை இது. இதன்மீது, வேர்க்கடலை, ஹெர்ப்ஸ், வாத்து இறைச்சி ஆகியவை தூவப்படும்.
4. ஹாக்கார்ல், ஐஸ்லாந்து:
நொதித்த சுறா மூலம் தயாரிக்கப்படுவதால், புளிப்பு சுவை அதிகம் கொண்டது. ஒருமுறை சாப்பிட்டால் அதன் புளிப்பு தன்மை உங்களைவிட்டு போகாது.
5. சனாக்ஜி, தென்கொரியா:
இது ஆக்டோபஸ் கைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆக்டோபஸை சமைப்பதற்கு முன்பு கொன்றுவிட்டாலும், உங்கள் தட்டில் சில அங்குமிங்கும் ஓடலாம்.
6.எஸ்கமோல்ஸ், மெக்ஸிகோ:
பார்ப்பதற்கு ஃப்ரைடு ரைஸ் போல் தோன்றும் இந்த உணவில் இருப்பது எறும்புகள்.
7. ஃப்ரைடு அலிகேட்டர், தெற்கு அமெரிக்கா:
இது சிக்கன் ஃப்ரை இல்லங்க. முதலை ஃப்ரை