2018ம் ஆண்டு புத்தாண்டின் போது வானத்தில் 'சூப்பர் மூன்' தெரியும் என்று நாசா ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி, இந்த புத்தாண்டுக்கு முந்தைய தினமான டிசம்பர் 31 தேதியும், நேற்றும் வானத்தில் வழக்கத்தை விட நிலா பெரிதாக தெரிந்தது.
மாதத்துக்கு ஒரு முறை வானில் தோன்றும் பவுர்ணமி என்னும் முழுநிலா, எப்போதாவது ஒரு முறை பெரிய அளவில் தெரியும். இதற்கு 'சூப்பர் மூன்' என்று பெயர். வான அறிவியல் கணக்குப்படி, விண்ணில் உள்ள கோள்கள் சூரியனையும், அதன் பால்வழிப்பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அதுபோல நிலவும் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வர 29.32 நாட்கள் ஆகிறது. பூமி சூரியனைச்சுற்றிவர 365.256 நாட்கள் ஆகிறது. இந்த கணக்கின்படி பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ‘பெரு நிலவு’ என்று அழைக்கப்படும் 'சூப்பர் மூன்' தெரிகிறது.
அப்போது வழக்கத்தை விட நிலா 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக வெளிச்சமாகவும் இருக்கும். அந்த பெரு நிலவு என்னும் சூப்பர் நிலா. நேற்று இரவு வானில் தோன்றியது. பூமியின் அட்சரேகைக்கு 20 டிகிரியில் வாழ்பவர்கள் பவுர்ணமியின்போது முழு நிலவைக்காண முடியும் என்பதால், 3ம் தேதி வரை இதுபோன்ற நிலவைப் பார்க்க முடியும்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில், பொதுமக்கள் இந்த சூப்பர் மூனை பார்க்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவில் இதனை பொதுமக்கள் கண்டு களித்தனர். இதைப் க்ளோஸ்அப்பில் பார்க்க முடியாதவர்கள், நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து அதனை தத்ரூபமாக ரசிக்கலாம்.
The supermoon is here! Be sure to bundle up then lead your “pack” outside to view the #WolfMoon ????, the most super of the three supermoons this winter! pic.twitter.com/Pjddyd4Flu
— NASA (@NASA) 2 January 2018
அதுமட்டுமில்லாமல், சூப்பர் மூன் எப்படி உருவாகிறது என்பது குறித்து விளக்கும் வீடியோவையும் நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இங்கே,
A supermoon is coming! Tonight, the full Moon will be at or near its closest point in its orbit around Earth, making it a supermoon. Bundle up, get outside and look up! https://t.co/9bpbhOzKnL Follow @NASAMoon for more lunar facts! pic.twitter.com/g1Bdqad8sq
— NASA (@NASA) 1 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.