ஆடி மாதம் முழுக்கவே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் சிறப்பானது.
Advertisment
ஆடிஅமாவாசை
ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர்.
ஆடி அமாவாசையில், நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள்.
எனவே ஆடி அமாவாசையில் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும்.
அமாவாசையன்று அதிகாலை காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலையில் தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, பிடித்த உணவுகளைப் படையலிட்டு, நம்மால் முடிந்த அளவுக்கு தானம் தந்து வழிபடுவது மிகச்சிறந்த புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. விளக்கேற்றவோ கோலமிடுவதோ கூடாது.
குறிப்பாக, இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது.
ஆடி மாதத்தில் முதல் நாள் (ஜூலை 17) ஒரு அமாவாசையும், ஆடி 31 ஆம் தேதி (ஆகஸ்ட் 16) அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது.
இப்படியான சூழலில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆடி அமாவாசை நன்னாளில், உங்கள் முன்னோர்களை நினைத்து, ஆறு பேருக்காவது அன்னதானம் வழங்குங்கள். இதில் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். அவர்களின் ஆத்மா, உங்களையும் உங்கள் வம்சத்தையும் இனிதே வாழச் செய்யும்.
இதுவரை நீங்கள் பட்ட கஷ்டமும் துக்கமும் காணாமல் போகும். ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“