Advertisment

ஆடிப் பெருக்கு: புது தாலி உடுத்தி புதுமண தம்பதிகள் உற்சாக கொண்டாட்டம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆடி மாதம் ஆகும். வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்.

author-image
WebDesk
New Update
ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆடி மாதம் ஆகும். வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்.  

Advertisment

ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை என பல விசேஷ நாட்களை கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின்  சிறப்புகளை இங்கு காணலாம்.

publive-image

தமிழகத்தில்  முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு அடிப்படையான  நீருக்கு  ஆதாரம் காவிரி நதியே. இந்த காவிரி நதிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவே இந்த ஆடி பதினெட்டு. நாகை மாவட்டம் பூம்புகாரில் இந்த காவிரி ஆறு கடலுடன் கலக்கிறது, இங்கே காவிரிக்கென்று தனி கோவிலும் உண்டு.

இந்த ஆடி மாதத்தில் தான் காவிரியின் பிறப்பிடமான குடகு மலை பகுதியில் பருவமழை பொழியும் நேரம், எனவே, அந்த நீர்தமிழகத்தில்  காவிரியின் புது நீராக  பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் இந்த நீரைக்  கொண்டே அந்த வருட சாகுபடிக்கான விதைகளை இடுவர்.

publive-image

நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்தையுமே தெய்வமாக வணங்கி விழா எடுத்து நன்றி தெரிவித்து  சிறப்பு செய்வது நம் தமிழர்களின் பழக்கம். சூரியனுக்கு பொங்கல், உழவனுக்கு உறுதுணையாக நிற்கும் மாட்டிற்கு மாட்டு பொங்கல், போன்று நீரிற்கு இந்த பதினெட்டாம் பெருக்கு.

இந்த நாளில் தான் அந்த வருடத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் முஹுர்த்த மாலைகளை நீரில் விடுவது வழக்கம். இது நம் முன்னோர்களால் மிக சிறப்பாக கொண்டாட பட்ட விழாக்களில் ஒன்று. கிராமப்புறங்களில் சிறுவர்கள் அழகாக வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் போன்ற அமைப்புடைய சப்பர தட்டியை இழுத்து வருவர்.

publive-image

சிலர் நொனாக்காய் மற்றும் தென்னை ஓலை குச்சிகளை வைத்து செய்யப்பட்ட சிறிய தேரை இழுத்து வருவதும் உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தே பல கலவை சாதங்களை(சக்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை) நெய்வேத்தியமாக  கொண்டு வருவர்.

எள்ளு உருண்டை, மாவிளக்கு ஆகியவற்றையும் நெய்வேத்தியங்களாக படைப்பது வழக்கம். முதலில் ஆற்றின் கரை யோரத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும். பின்பு ஆற்றின் அடியில்  இருந்து மண் எடுத்து எத்தனை சுமங்கலிகள் உள்ளனரோ அத்தனை  உருண்டைகளாய்  பிடித்து வைத்து அதற்கு  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூக்களை வைக்க வேண்டும். இதையே  காவிரி அம்மனாக நினைத்து அதற்க்கு காதோலை கருகமணி(ரோஜா வர்ணம் அடித்த பனை ஒலை   சுருளில் சிறிய கருப்பு வளையல் கோர்க்க பாட்டிற்கும்), மஞ்சள் தடவிய நூல், போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.

பின்பு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அம்மனுக்கு முன்பு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை பாக்கு , பழம்(பேரிக்காய் கட்டாயம் இருக்கும்), பூ, மஞ்சள் , குங்குமம், தேங்காய், போன்றவற்றை வைக்க வேண்டும்.பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைப்பர். (வீட்டிலேயே படைப்பவர்கள் மண்ணில் செய்வதற்கு பதில் மஞ்சளில் அம்மனை செய்து வழிபடலாம்.)

பின்பு வீட்டில் இருந்து தயார் செய்யப்பட்டு எடுத்து வந்த எள் உருண்டை , மாவிளக்கு,கலவை  சாதங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதோடு சிறிது பச்சரிசியுடன் பயத்தம் பருப்பு(பாசி பருப்பு) சேர்த்து ஆற்று நீரில் கழுவி அதில் வெல்லம் கலந்து நிவேதியமாக படைக்க வேண்டும்.

publive-image

படைக்கும் முன்பு, சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் வேறு நகையை அணிந்து கொண்டு  தங்கள் தாலியை காவிரி அம்மனுக்கு போட்டு படைத்த பின்பு அதை தங்கள் கணவன்மார்களின் கையினால் மீண்டும் அணிந்து கொள்வார்கள்.

படைத்து முடித்ததும் அம்மன் மேல் இருந்த மஞ்சள் நூலினை எடுத்து ஆண்கள் கைகளிலும் ,பெண்கள் கழுத்திலும் அணிந்து கொளவார்கள். பின்பு அந்த அம்மனாக நினைத்து வழிபட்ட மண் உருண்டைளை ஆற்று நீரில் கரைத்து இந்த வருடமும் தங்களுக்கு  உறுதுணையாக இருந்து விவசாயம் வளம் பெற உதாவுமாறு  வேண்டிக்கொள்வது வழக்கம்.

அந்தவகையில், திருச்சி ஸ்ரீரங்கம் காவேரி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு பெரிய வாழை இலை போட்டு அதில் முக்கனி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வைத்தும், காப்பரிசி, காதாளை கருகமணி, முளைபாரி வைத்தும், சுமங்கலி பெண்கள் தங்களுடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி கொண்டும் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து கட்டும் வைபவங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நீர்நிலைகளில் தம்பதிகள், பொதுமக்கள் நீராடி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அதேபோல், ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பவானி கூடுதுறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் புனித நீராடி, படித்துறையில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கினை முன்னிட்டு நீர் நிலைகள் சுற்றி தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு கவசங்கள் நிறைந்த வாகனங்கள், காவிரியில் சிறிய வகை ரப்பர் படகின் மீது அமர்ந்து பக்தர்களையும் பொது மக்களையும் தீயணைப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆற்று நீரில் யாரும் அடித்துச் செல்லப்பட்டால் உடனே மீட்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரப்பர் கடையில் வீரர்கள் காத்திருக்கின்றனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீராடி புது தாலி உடுத்தி வருவதால் காவேரி கரையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

publive-image

ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மங்களப் பொருட்களை காவிரி அன்னைக்கு சீதனமாக கொடுப்பதால், இந்த தருணத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ள ஆர்வமுடன் பெண்கள் திரண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment