/indian-express-tamil/media/media_files/2025/09/30/aayutha-poojai-2025-09-30-17-48-07.jpg)
புதன்கிழமை அன்று உங்கள் இல்லங்களிலும், கடைகளிலும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையைச் செய்ய உகந்த நல்ல நேரங்கள் பற்றி பார்ப்போம். ஆயுத பூஜை வழிபாடுகள் மிகவும் எளிமையானவை. இந்த நாளில் நாம் எந்தப் பொருட்களால் வாழ்வு பெறுகிறோமோ, அவற்றிற்கு மரியாதை செய்து பூஜை செய்வதன் மூலம், அன்னை சரஸ்வதி மற்றும் துர்கா தேவியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று, உங்கள் தொழில் மற்றும் பணியில் வெற்றியை அடையலாம்.
வழிபாடு நேரம்: இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை நாளை அக்டோபர் 1ம் தேதி காலை 9:15 முதல் 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக அமைந்திருக்கிறது. அதே போன்று நாளை மாலை 6 மணிக்கு மேல் 7:30க்குள் பூஜை செய்யலாம்.
வீடு மற்றும் கடைகளில் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு நடைமுறை: ஆயுத பூஜை அன்று வீட்டில் உள்ள கருவிகள் மற்றும் கடைகளில் உள்ள தொழில் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து, அன்னைக்கு நன்றி தெரிவித்து வழிபட வேண்டும்.
1. தங்கள் தொழில் சார்ந்த அல்லது வாழ்வுக்கு ஆதாரமான கருவிகளையும், உபகரணங்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2. வியாபாரிகள் தங்கள் நோட்டுகளையும், கடைகளுக்கு உண்டான வியாபாரப் பொருட்களையும் முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் திருநீறு கரைத்து 3 பட்டையிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும்.
3. திருநீறு வைத்து, திலகமிட்ட பொருட்களை அம்பாளின் திருவுருவ புகைப்படத்திற்கு முன் வைத்து அம்பாளுக்கு பிரியமான சர்க்கரைக் கலந்த பொங்கல், புளியோதரை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்து படைக்கலாம். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். வழக்கம் போல அவல், பொரி, கடலை, பழங்கள், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் போன்ற நெய்வேத்தியங்களை உங்கள் வசதிக்கேற்ப தயார் செய்து அம்பாளுக்குப் படைக்கலாம்.
4. இந்த வழிபாட்டைச் செய்வதன் மூலம், நமக்கு எல்லாவிதமான வித்தைகளும் (கலைகளும்) கைகூட வேண்டும், ஞானங்கள் கிடைக்க வேண்டும் என்று அன்னை சக்தியை மனதாரப் பிரார்த்திக்க வேண்டும். பாடத் தெரிந்தவர்கள் அன்றைய தினம் சுவாமிக்கு முன்னால் ஒரு சில பாடல்களைப் பாடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.