குழந்தைகள் ஆக்‌ஷன் வீடியோ கேம் விளையாடினால் ஞாபக மறதி ஏற்படும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சண்டையிடும் வீடியோ கேம்களை அதிகம் விளையாண்டால் நினைவுத்திறன் குறைந்து மறதி ஏற்படும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

சண்டையிடும் வீடியோ கேம்களை அதிகம் விளையாண்டால் நினைவுத்திறன் குறைந்து மூளைக் கோளாறுகள், மறதி, மன அழுத்தம், அல்சைமர் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இம்மாதிரியான ஆக்‌ஷன் வீடியோ கேம்களால், நினைவுத்திறனுக்கு உதவும் மூளையின் சாம்பல் நிறத்திட்டுகளில் குறைபாடு ஏற்படும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கனடாவில் உள்ள டீ மார்ட்டெல் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூளையின் சில பிரிவுகளை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும், மன இறுக்கத்தை தளரும் என கூறப்பட்டது.

இந்த ஆய்வில், ஆக்‌ஷன் வீடியோ கேம்களை அதிகளவில் விளையாடும் குழந்தைகள், இளைஞர்களுக்கு மூளையில் உள்ள சாம்பல் நிறத்திட்டுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு நினைவுத்திறன் செயலிழப்பு, பார்வை குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும் என தெரியவந்துள்ளது.

மேலும், பார்கீன்சன், அல்சைமர், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதித்தவர்களுக்கு மூளையின் சாம்பல் நிறத்திட்டுகளில் குறைபாடுகள் இருப்பதால், அவர்கள் அதிகளவில் ஆக்‌ஷன் வீடியோ கேம்களை விளையாடக்கூடாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

×Close
×Close