தமிழ் சினிமாவின் ஒரே நடிகர் திலகம் என இன்றுவரை ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு நடிகர் பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.
இதில் பிரபு மட்டும் தந்தையின் வழியில் சினிமாவில் கால்பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இளைய திலகம் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபு இதுவரை, 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும், பிரமாண்டமான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடைய மகன் விக்ரம் பிரபு தாத்தா, தந்தை வரிசையில் இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இவருக்கு, 2009ஆம் ஆண்டு அத்தை மகனுடன் திருமணம் ஆனது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினர்.
இப்போது ஐஸ்வர்யா, பற்றிய சுவாரஸ்யாமான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
பெரிய நடிகரின் மகளான ஐஸ்வர்யா, சொந்தமாக கேக் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
மெல்ட்ஸ் டெசர்ட் என்ற பெயரில் கேக்ஸ் மற்றும் ஸ்வீட் நிறுவனம் நடத்தி வரும் ஐஸ்வர்யா, ஆர்டரின் பேரில் விதவிதமாக கேக் தயாரித்து வழங்கி வருகிறார்.
இதற்காக ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து, அதில் தான் தயாரித்த விதவிதமான கேக்குளின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“