/indian-express-tamil/media/media_files/2025/10/23/tamannah-2025-10-23-16-46-54.jpg)
உடல் பருமன் என்பது எல்லோருக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.இந்த உடல் பருமனை குறைக்க மருத்துவர்களை அணுகுகிறோம். உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, டயட் இருப்பது என பல செயல்களை செய்கிறோம். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிடுகிறோம். அதாவது, சிலர் பண்டிகைகளின் போது மது அருந்துவார்கள். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் மது அருந்துவார்கள்.
உடல் எடையை குறைக்க பல பிட்னஸ்களை மேற்கொண்டு வரும் அவர்கள் மதுவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். இது நமது உடல் பருமன் குறைப்பை சீர்குலைக்கிறது. இந்நிலையில், நடிகை தமன்னாவின் உடற்பயிற்சியாளர் சித்தார்த்த சிங் மதுவில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது என்றும் உடற்பயிற்சி இலக்குகளை நோக்கி செயல்படும் போது மதுவை எப்படி கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மதுவில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது
இரண்டு பிண்ட் பீரில் 200 கலோரிகள் இருப்பதாக சித்தார்த்த சிங் தெரிவித்துள்ளார். அதாவது, நீங்கள் 30 முதல் 45 எம்.எல் வரையிலான இரண்டு மாதுபானங்களை குடிக்கிறீர்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விஸ்கி, ஜின் மற்றும் ஓட்கா என எந்த பானமாகவும் இருக்கலாம். இந்த பானங்களில் 200 முதல் 250 கலோரிகள் வரை இருப்பதாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல், இரண்டு கிளாஸ் ஒயினிலும் இதேபோன்று 200 முதல் 250 கலோரிகள் வரை இருக்கலாம் என்றும் மிதமான குடிப்பழக்கம் கூட சில நூறு கலோரிகளை சேர்க்கும் என்றும் அவர் கூறினார். இது கூடுதலாக உணவு உண்பதற்கு சமம் என்றும் சித்தார்த்த சிங் தெரிவித்தார்.
இது வெறும் கலோரி மட்டுமல்ல
இந்த ஸ்பிரிட்களில் இருக்கும் கலோரிகள் உண்மையில் அவ்வளவு முக்கியமல்ல. நீங்கள் குடிக்கக் கூடாது என்று நான் சொன்னால், நீங்கள் கேட்கப் போவதில்லை. எனவே, நீங்கள் இரண்டு டிரிங்க்ஸுக்கு மேல் குடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குடிக்கும் இடைவெளியில் நிறைய தண்ணீர் அருந்துங்கள். அடிப்படையில் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.
மேலும்,நீங்கள் பீர் குடித்தால் இரண்டு பீர்களுக்கு மேல் குடிக்காதீர்கள். ஏனென்றால், இந்த மதுபானத்தில் இருந்து வரும் கலோரிகள் உங்கள் முன்னேற்றத்தைக் கெடுக்கப்போவதில்லை. இந்த மதுபானத்தை நீங்கள் அருந்திய பிறகு நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் உங்கள் இலக்கைச் சிதைக்கும் என்று சித்தார்த்த சிங் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us