உறை இல்லாமல் கெட்டித் தயிர்: ராதிகா சரத்குமார் டிப்ஸ்
காய்ந்த மிளகாயின் காம்புகள் மூலம் உறையில்லாமல் கெட்டித் தயிர் எப்படி தயாரிப்பது என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். அதற்கான ஈசியான வழிமுறைகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
தயிரில் அதிகமான புரோபயாடிக் இருக்கிறது. இது நம் குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக உதவி செய்கிறது. இதேபோல், செரிமானத்திற்கும் தயிர் துணையாக இருக்கிறது. தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
Advertisment
தயிரில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கின்றன. இவை நம் உடலில் உள்ள நச்சுகளை அகற்றி ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து தடுக்க உதவுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் உடலுக்கு தேவையான பல கனிமங்கள் தயிரில் நிறைந்துள்ளன. இவை நம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவை கூட்டுகிறது.
இத்தகைய நன்மைகள் நிறைந்த தயிரை, உறை ஊற்றாமல் எப்படி தயாரிப்பது என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். அதன்படி, பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவ்வாறு பால் நன்றாக கொதித்ததும் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்படி இறக்கி வைத்த பாலில், சுமார் 8 அல்லது 10 காய்ந்த மிளகாயின் காம்புகளை போட்டு விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் உறை ஊற்றாமல் கெட்டித் தயிரை தயாரிக்கலாம் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - Thagaval Kadambam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.