எல்லா அம்மாக்களுக்கும் புடிச்ச நடிகை சரிதா: லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஆசையாம்!
சிவகார்த்திகேயன் இப்போ இருக்கிற ஏஜ் டைம்ல நான் ரஜினி சார்க்கூட வேலை செய்ஞ்சுருக்கேன்.. அதனால எனக்கு சிவா பாக்கும் போது சில நேரங்கள்ல அப்படியே ரஜினி மாதிரி இருக்கும்
சிவகார்த்திகேயன் இப்போ இருக்கிற ஏஜ் டைம்ல நான் ரஜினி சார்க்கூட வேலை செய்ஞ்சுருக்கேன்.. அதனால எனக்கு சிவா பாக்கும் போது சில நேரங்கள்ல அப்படியே ரஜினி மாதிரி இருக்கும்
தமிழ் சினிமாவில் கமல், ரஜினிக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர்... சரிதா.
Advertisment
தன்னருகில் யார் நின்றாலும் சரிதாவின் நடிப்புதான், அந்தக் காட்சியில் ஒளிரும்; வசனம் சொல்ல வேண்டியதை, சரிதாவின் கண்கள் பாதி சொல்லிவிடும்.
ஒருகட்டத்தில், நடிப்பதைக் குறைத்துக் கொண்டபோதிலும் இவரின் குரல் மட்டும் நடித்துக் கொண்டே இருந்தது. தன் குரலால், யார் யாரோ நடித்ததற்கெல்லாம் உயிர் கொடுத்தார்.
இப்போது மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரி எண்ட்ரீ கொடுக்கிறார் சரிதா.
Advertisment
Advertisements
சரிதா சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாவீரன் படம் அதைத் தாண்டி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மாவீரன் படத்துக்காக மடோனா அஸ்வின் என்கிட்ட கதை சொல்லும் போது ரொம்ப இம்பிரெஸிவா இருந்தது, என்னால வேண்டாம் சொல்ல முடியல. முக்கியமா எனக்கு சிவகார்த்திகேயன் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஒரு காரணம்.
படம் ஒத்துக்கிட்ட பிறகு, எனக்கு கோவிட் வந்தது. ரெண்டரை வருஷமா வீட்டை விட்டு வெளியே வரல. வேலைக்காரங்க கூட வச்சுக்கல. எனக்கு ரொம்ப பயம் இருந்தது. நான் இயக்குனர் அஷ்வின்கிட்ட வேற யாரையாவது பாதுக்கோங்கன்னு சொன்னேன். ஆனா அஷ்வின் வேற ஆப்ஷனே கிடையாது, நீங்க மட்டும் தான் சொல்லிட்டாரு.
சிவகார்த்திகேயன் கூட எப்போ வர்றாங்களோ அப்போ வரட்டும், ஆனா நான் தான் நடிக்கணும் சொன்னாரு. முதல் நாள் ஷூட்டிங் அப்போவே அவர் என்கூட ரொம்ப கனெக்ட் ஆயிட்டாரு. புதுசா யார்கிட்டயோ பேசுற மாதிரியே இல்ல.. வீட்டுல இருக்கிறவங்க கிட்ட பேசுற மாதிரிதான் இருந்தது.
இந்த மாதிரி ஒரு படம் திருப்பி அமையுமா எனக்கு தெரியல..
சிவகார்த்திகேயன் இப்போ இருக்கிற ஏஜ் டைம்ல நான் ரஜினி சார்க்கூட வேலை செய்ஞ்சுருக்கேன்.. அதனால எனக்கு சிவா பாக்கும் போது சில நேரங்கள்ல அப்படியே ரஜினி மாதிரி இருக்கும். அது இயல்பாவே அவர்கிட்ட இருக்கு..
எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும். இப்போ சிவாவ அதுக்கு மேல பிடிக்குது… அதனால தான் அவரை செல்லமா குட்டி ரஜினி கூப்பிடுவேன்.
எனக்கு லோகேஷ் கனகராஜ் டிரைக்ஷன்ல நடிக்கணும் ரொம்ப ஆசை. எனக்கு அவர் படங்கள் பிடிக்கும். விக்ரம் படம் பாத்துட்டு லோகேஷ்க்கு போன்ல வாழ்த்துகள் சொன்னேன். அப்போ எ’ங்க அம்மாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்’ சொன்னாரு.… இப்படி பல விஷயங்களை சரிதா சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“