புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சீதா, சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.
அதில் இவரது மாடித்தோட்ட வீடியோக்கள் மிக பிரபலம். முதலில் சில செடிகளை நடவு செய்த சீதா, மாடித்தோட்டம் குறித்து சில விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, பீர்க்கங்காய், கேரட், பீன்ஸ் என முப்பதுக்கும் மேற்பட்ட காய்கறி, பழவகை மரங்களை வளர்த்திருக்கிறார். மேலும், பல வகையான கீரைகளும், பூச்செடிகளையும் வளர்க்கிறார். பூச்சிவிரட்டிகளை இவரே தயாரித்துப் பயன்படுத்துகிறார்.
இந்நிலையில் நடிகை சீதாவின் மாடித்தோட்டத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
இஞ்சி இலை எல்லாம் காய்ஞ்சி இப்போ அறுவடைக்கு தயாரா இருக்கு பாருங்க என்று இஞ்சி வளர்க்கு தொட்டியை காண்பிக்கிறார். சீதா தொட்டியில் இருந்து தழைகளை பிடுங்கியதும், தொட்டி முழுக்க இஞ்சி நன்றாக வளர்ந்திருக்கிறது. அதை பிடுங்க முடியவில்லை என்பதால், தொட்டியில் இருந்து மண்ணை அப்படியே கீழே கொட்டி அதன்பிறகு இஞ்சியை எடுக்கிறார்.
ஒரு தொட்டியில் ஒரு கூடை நிறைய இருக்கும் இஞ்சியை காட்டி, பாருங்க எவ்வளவு ஃபிரெஷா இருக்கு என்று சந்தோஷத்தில் பூரிக்கிறார் சீதா.
அதேபோல மாடித் தோட்டத்தில் விளைந்த கத்தரி, சுண்டைக்காய், புடலங்காய் அறுவடை செய்யும் வீடியோவையும் சீதா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“