Advertisment

ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?

ஆடி அம்மாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?

வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?

ஆடி அம்மாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் , ஆடி அம்மாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே அமாவாசை என்று, பித்ரூக்களை வழிபாடு செய்வது, ஆசி பெருவது வாழ்வை பல விதங்களில், மேம்படுத்தும்.

Advertisment

தர்ப்பணம் செய்வது எப்படி ?



அக்கரையுடன் நாம் செய்யும் காரியம்தான் சிரார்த்தம் என்று மருவி உள்ளது. எனவே, இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கரையுடனும் அனைத்து காரியங்களை செய்ய வேண்டும்.

தர்ப்பணம் அல்லது இறந்தவர்களுக்கு பித்ரு காரியங்களை நீர் நிலைகளில் அருகில் செய்வார்கள். ஆடி அம்மாவாசை அன்று, 6 கடல், மலை, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்து காரியம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக, பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள். ஆனால் இந்த இடங்களுக்கு  செல்ல முடியாவதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகில் இருக்கும் நீர்நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட  அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.

வீடு முழுவதும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, அதை செய்துவிட  வேண்டும்.

நீர் நிலைகளில் கூட்டமாக தர்ப்பண்ம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்ந்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால் , வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில்,  உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.

இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவர்களுக்கு  இயன்ற வகையில், சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி  வழிபட்டு  முன்னோர்களின் ஆசி பெறலாம்.

குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதயருக்கு  பிடித்த உணவுகளை  சமைத்து படைக்க வேண்டும். எத்தனை  நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு  தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம். அல்லது பெரிய தலைவாழை இலையில் உணவு  பரிமாறி படைக்கலாம்.

முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதனை செய்து பின்னர் சாப்பிடலாம்.

காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நேய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால்,  முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

காகம் வரவில்லை என்றாலே அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.

பித்ருக்களுக்கு  திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். சிலர் கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால் அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும் அரிசி, தானியங்கள் தானம் செய்வதால் மலாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சரியான நேரம்?



அதிகாலையில் இருந்து உச்சி வேலையான 12 மணிக்கு முன்பே கொடுத்திட வேண்டும். விரத சாப்பாடு கொடுக்க வேண்டும். விரத சாப்பாடு மதியம் 2 மணிக்கு கொடுக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment