Advertisment

திருச்சி, கன்னியாகுமரியில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை.

author-image
WebDesk
New Update
திருச்சி, கன்னியாகுமரியில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர்.

Advertisment

அந்த வகையில், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகேயுள்ள, அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க, ஆண்டுதோறும், ஆடி அமாவாசை நாளில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருவர்.

publive-image

அதன்படி, இன்று ஆடி அமாவாசை என்பதால், அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் செய்ய, பல்லாயிரக் கணக்கானோர் கூடினர். காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்க்கு திதி கொடுத்தனர்.

இதை முன்னிட்டு, மாவட்ட , மாநகர நிர்வாகங்கள் சார்பில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

publive-image

பொதுமக்கள் திதி கொடுக்க பெருந்திரளாக கூடியதால், மாம்பழச் சாலையிலிருந்து, அம்மா மண்டபம் வழியாக, ஸ்ரீரங்கம் செல்லும் பாதை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

முன்னதாக, இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதால் பல எந்த அமாவாசையில் திதி கொடுப்பது எனக்கு குழம்பி இருந்தனர். சிலர் இன்றும், வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி திதி வரும் ஆடி அமாவாசையிலும் திதி கொடுக்க முடிவு செய்தனர். அதே நேரம், ஆகஸ்ட் 16ஆம் தேதி வரும் அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தால் மிகசிறப்பு எனவும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

publive-image

இன்றைய அமாவாசை பகல் பொழுதில் தொடங்கி பகலிலே முடிந்து விடுவதால். இன்றைய அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில். ஒவ்வொருவர் குடும்பத்தில் மறைந்த தந்தை,தாய் மற்றும் ஏனைய உறவுகளின் நினைவாக ஆடி அமாவாசை தினத்தில் திதி (தற்பணம்)கொடுப்பது வாழும் மக்களின் சந்ததிகளுக்கு பாதுகாப்பும், ஆசியும் என்ற நம்பிக்கை காலம், காலமாக இந்து மத மக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை நாளில் கன்னியாகுமரி கடலோரத்தில், கடல் மண் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

publive-image

இந்த ஆண்டு இரண்டாவது ஆடி அமாவாசை தினமான (ஆகஸ்ட்_16) நாள் வரும் அமாவாசை தினத்தையே தங்கள் குடும்ப முன்னோர் நினைவு போற்றும் தினமாக அனுஸ்டிப்பு என்ற நிலையில். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பகுதியிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலே மக்கள் முன்னோர் நினைவு புனித நீராடல் நடைபெற்றது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment