இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒரு மருத்துவர், முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
Advertisment
ஆனால் படம் ரீலிசாவதற்கே முன்பே, அதிதி சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.
Advertisment
Advertisements
அவரது துறுதுறு கேரெக்டர், பெரிய இயக்குனரின் மகள் என்கிற பந்தா இல்லாதது போன்ற அவரது குணங்கள் பலரையும் வசீகரித்து விட்டது.
இப்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் என எங்கு பார்த்தாலும் அதிதி வீடியோ தான் இருக்கிறது.
பிரமாண்ட இயக்குனர் மகள் என்பதாலேயே, அதிதிக்கு இயல்பாகவே சினிமா மீது ஆர்வம் இருந்தது.
படிப்பை முடித்து பிறகு, அதிதிக்கு மீண்டும் சினிமா ஆசை வர, அதை தன் பெற்றோரிடம் கூற, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஷங்கரின் மகளாகவே இருந்தாலும், அதிதி நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டுதான், சினிமாவில் காலடியை எடுத்து வைத்தார்.
விருமன் பட இசை வெளியீட்டு விழாவில், ரோபோ ஷங்கர், அதிதியின் மொக்கை ஜோக் குறித்து பேசினார்.
ரோபோ சங்கர் கலாய்த்த போது அதிதி கொடுத்த குட்டி குட்டி கியூட் ரியாக்ஷன்ஸ் இணையத்தில் செம வைரலாகின.
படப்பிடிப்பிலும் அதிதி, ஹீரோயின், பெரிய இயக்குனரின் மகள் என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் அத்தனை போ்களிடமும் இயல்பாகவும் பிரியத்துடன் பழகினார் என்றார்கள்.
இப்போது அதிதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். தேசிய விருது வாங்கிய ‘மண்டேலா’ பட இயக்குநர் அஸ்வின் மடோனா இப்படத்தை இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“