இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒரு மருத்துவர், முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
Advertisment
ஆனால் படம் ரீலிசாவதற்கே முன்பே, அதிதி சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். அவரது துறுதுறு கேரெக்டர், பெரிய இயக்குனரின் மகள் என்கிற பந்தா இல்லாதது போன்ற அவரது குணங்கள் பலரையும் வசீகரித்து விட்டது. இப்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் என எங்கு பார்த்தாலும் அதிதி வீடியோ தான் இருக்கிறது. அதிலும் கஞ்சாப் பூ கண்ணால, மதுரை வீரன் அழகுல பாடல்களில் அதிதி ஆடியது போன்று பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
பிரமாண்ட இயக்குனர் மகள் என்பதாலேயே, அதிதிக்கு இயல்பாகவே சினிமா மீது ஆர்வம் இருந்தது. ஆனால், படிப்பும் முக்கியம் என்பதால், அதிதி மருத்துவம் படிப்பில் சேர்ந்து அதிலும், தேர்ச்சி பெற்றார்.
படிப்பை முடித்து பிறகு, அதிதிக்கு மீண்டும் சினிமா ஆசை வர, அதை தன் பெற்றோரிடம் கூற, அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இப்படித் தான் அதிதியின் சினிமா பயணம் ஆரம்பமானது.
ஷங்கரின் மகளாகவே இருந்தாலும், அதிதி நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டுதான், சினிமாவில் காலடியை எடுத்து வைத்தார்.
விருமன் டீம் ஏற்கனவே ஒரு நல்ல கேரக்டர் ரோல் தேடிக்கொண்டிருந்தது. நான் கவர்ச்சியான வேடத்தையோ அல்லது கிராமப்புற வேடத்தையோ தேடவில்லை. ஆனால் எனக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. நான் அந்த பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்தேன், முத்தையா சார் அதை மிகவும் விரும்பினார், அவர் என்னை நடிக்க ஊக்குவித்தார்.
நான் எப்போதும் பாட விரும்புவேன். நடிப்பில் எனக்கு இருக்கும் அதே ஆர்வம் பாடுவதிலும் இருக்கிறது. பாட்டு, நடிப்பு இரண்டையும் சமமாக தொடர்வேன். யுவனுடன் பாடுவதற்கு, அதுவும் என் படத்தில் ரொம்ப அருமையான ஒரு அனுபவம்
பட ரிலீஸுக்கு முன்பு இருந்தே, எனக்கு மிகுந்த ஆதரவும் அன்பும் கிடைத்து வருகிறது. தயவு செய்து இதைத் தொடருங்கள் என்று விருமன் படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது அதிதி பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில் விருமன் பட இசை வெளியீட்டு விழாவில், ரோபோ ஷங்கர், அதிதியின் மொக்கை ஜோக் குறித்து பேசினார். அவங்க மொக்கை ஜோக் அடிக்க ஆரம்பிச்சா.. அய்யோ.. ஆத்தாடி என ரோபோ சங்கர் கலாய்த்த போத அதிதி கொடுத்த குட்டி குட்டி கியூட் ரியாக்ஷன்ஸ் இணையத்தில் செம வைரலாகின.
படப்பிடிப்பிலும் அதிதி, ஹீரோயின், பெரிய இயக்குனரின் மகள் என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் அத்தனை போ்களிடமும் இயல்பாகவும் பிரியத்துடன் பழகினார் என்றார்கள்.
இப்போது அதிதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதற்கான பட பூஜை சமீபத்தில் தொடங்கியது. தேசிய விருது வாங்கிய 'மண்டேலா' பட இயக்குநர் அஸ்வின் மடோனா இப்படத்தை இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“