'ஹேர் கட் நன்றாக இருந்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்'... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடி திருத்தும் சென்னை சலூன்!
"ஹேர் கட் நன்றாக இருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்" என்கிறார் சென்னையில் மூன்று கிளைகளை கொண்ட முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் 'தனுஷ் சலூன்' உரிமையாளர் தணிகை வேல்.
"ஹேர் கட் நன்றாக இருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்" என்கிறார் சென்னையில் மூன்று கிளைகளை கொண்ட முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் 'தனுஷ் சலூன்' உரிமையாளர் தணிகை வேல்.
"கடந்த 10 வருடங்களாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடி வெட்டி வருகிறோம். அவர்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ள, பள்ளியின் அடையாள அட்டை வேண்டும், அவர்கள் பள்ளிச் சீருடையில் இருக்க வேண்டும்." என்கிறார் 'தனுஷ் சலூன்' உரிமையாளர் தணிகை வேல்.
"ஹேர் கட் நன்றாக இருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்" என்கிறார் சென்னையில் மூன்று கிளைகளை கொண்ட முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் 'தனுஷ் சலூன்' உரிமையாளர் தணிகை வேல். உதவிக் கரம் நீட்டுவதில் தமிழ்ச் சமூகம் எப்போதுமே தனித்து நிற்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்.
Advertisment
அந்த வகையில், தமிழக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் முடியை இலவசமாக திருத்தி வருகிறது சென்னையை சேர்ந்த 'தனுஷ் சலூன்'. இந்த மெச்சத் தக்க சேவையை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார் தணிகை வேல். விளம்பரத்திற்காக அல்லாமல், பொதுநலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த சேவையை அவர் ஆற்றி வருகிறார்.
பொதுவாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் குளிரூட்டப்பட்ட சலூன்களில் முடி வெட்டிக் கொள்ளவது என்பது எட்டாக் கனி. இதற்காக 200 ரூபாய்க்கு மேல் அவர்கள் பணம் செலவு செய்ய வேண்டும். அந்தப் பணத்தை அவர்களுக்கு மிச்சப்படுத்தி கொடுப்போதோடு, அவர்கள் மனதிலும் நீக்கா இடம் பிடிக்கிறார் தணிகை வேல்.
இதுபற்றி அடையார் டைம்ஸ் யூடியூப் சேனலுக்கு தணிகை வேல் அளித்துள்ள பேட்டியில், "தனுஷ் சலூனை 25 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறேன். இதனை ஒரு பிராண்ட் போல் வடிவமைத்துள்ளோம். எனது தாத்தா, அப்பாவுக்குப் பிறகு மூன்றாவது தலைமுறையாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன்.
Advertisment
Advertisements
கடந்த 10 வருடங்களாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடி வெட்டி வருகிறோம். அவர்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ள, பள்ளியின் அடையாள அட்டை வேண்டும், அவர்கள் பள்ளிச் சீருடையில் இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி பள்ளி சீருடையிலோ அல்லது வேற எந்த அரசுப் பள்ளியின் சீருடையிலோ அவர்கள் வர வேண்டும். இந்த இரண்டுடன் வரும் மாணவர்கள் எங்களது மூன்று கிளைகளிலும் முடி வெட்டிக் கொள்ளலாம்.
முதல் கிளை அடையாறில் இருக்கும் காமராஜ் அவென்யூ-வில் இருக்கிறது. இரண்டாவது கிளை பெசன்ட் நகர் செல்லும் வழியில் சாஸ்திரி நகரில் இருக்கிறது. மூன்றாவது கிளை ஈ.சி.ஆரில் உள்ள வெட்டுவான்கேணி பகுதியில் அமைந்துள்ளது. இந்த மூன்று கிளைகளிலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டும் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.
எங்களது கடையில் முடி வெட்டிக் கொள்ள ரூ. 200 ஆகும். கொஞ்சம் வசதியானவர்கள் இங்கு வந்து வெட்டிக் கொள்ளவர்கள். அந்த 200 ரூபாயை கொடுக்க இயலாத, ஏ.சி சலூனில் இலவசமாக முடி வெட்டிக் கொள்ள ஏங்கும் மாணவர்களின் ஏக்கத்தை போக்குகிறோம். இதனை ஒரு சேவையாக மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்.
எல்லோரையும் போலவே, நானும் உதவ நினைத்தேன். ஏதோ என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன். முடி வெட்டிக் கொள்வது என்பது அன்றாட தேவைகளில் ஒன்று. அதற்கு மாணவர்கள் பணம் செலவழிக்க வேண்டும். எங்களால் முடிந்த உதவியை செய்து, அவர்களின் குடும்பத்தினரின் சுமையை குறைக்கிறோம்.
மாணவர்கள் முடி வெட்டிக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். எத்தனையோ பள்ளிகளில் முடி வெட்டதா மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கிறார்கள். பள்ளியை விட்டே திரும்ப அனுப்பியுள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதே எங்களின் நோக்கம். நாங்கள் படிக்கும்போதெல்லாம் என்.சி.சி மாஸ்டர்ஸ் குச்சியை வைத்து முடி அதிகமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அப்படி அதிகம் இருந்தால் வெளியே அனுப்பி விடுவார்கள். அதுபோன்று இப்போதும் நடக்கிறது. அதனால் தான், முடி வெட்டிக் கொள்ளவது முக்கியம் என்கிறேன். ஹேர் கட் நன்றாக இருந்தால் பிள்ளைகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்பது கருத்து. முகத்தில் அழகை சேர்ப்பது ஹேர் கட் தான். அவர்களுக்கான தனி லுக்கை கொடுப்பதும் ஹேர் கட் தான்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்படியொரு சேவையை செய்கிறோம் என நாங்கள்தான் முன்வந்து இங்குள்ள சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் சொன்னோம். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு எங்களது சேவைக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். தினசரி மாணவர்களை இங்கு முடி திருத்திக் கொள்ள அனுப்பியும் வருகிறார்கள். ஆசியர்கள் சொன்ன வழிகாட்டுதலின் பேரில் தான் நாங்கள் முடி வெட்டுகிறோம்.
இதுவரை 500 மாணவர்களுக்கு மேல் முடி வெட்டிக் கொண்டுள்ளார்கள். எல்லா மாதமும் 50 முதல் 100 மாணவர்களுக்கு மேல் முடி வெட்டிக் கொள்கிறார்கள். மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் வந்து முடி வெட்டிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அல்லது காவலாளிகள் அவர்களை அழைத்து வருகிறார்கள். இந்த சேவையில், அந்த மாணவர்கள் எங்களை நினைக்க வேண்டும். அதுமட்டும் எங்களுக்கு போதும்." என்று அவர் கூறுகிறார்.