அயர்லாந்த் நாட்டின் கடற்கரை கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றது, இங்கு ஒரு நிமிடம் வெயிலாகவும், அடுத்த நிமிடமே மழையாகவும் இருக்கும். இந்த கடற்கரையில் அலைகளை பார்க்க நீங்கள் விரும்பினால் கதகதப்பான ஆடையை அணிந்து வர வேண்டும் அல்லது விமான பாகங்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கூடாரங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தஞ்சம் அடைய வேண்டும்.
Advertisment
அயர்லாந்தின் சாண்ட் ஹவுஸ் ஹோட்டல் நடத்தி வரும் பால் டைவர் தான் இந்த இரண்டு மறுசுழற்சி செய்யப்பட்ட விமானக் கூடாரங்களின் பெருமைக்குரிய உரிமையாளர்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான காணொளி
&t=75s
Advertisment
Advertisements
”நாங்கள் இங்கே கடற்கரையோரமாக இருக்கிறோம். இங்குள்ள எல்லாமே துருப்பிடித்து விட்டன. படுக்கையறைகளில் உள்ள ஜன்னல்கள், கதவுகள், கைப்பிடிகள் எல்லாமே துருப்பிடித்து விட்டன. ஆனால் இந்த கூடாரங்கள் இதுவரை அருமையாக இருந்து வருகின்றன. மிகச்சிறந்த முதலீடு என்றே நாங்கள் இதை நினைக்கிறோம் என்கிறார் ஹோட்டல் உரிமையாளர் பால் டைவர்….
ஸ்பெயினில் உள்ளதை போன்ற விமானக் கல்லறைகள் உலகம் முழுவதும் உள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் 700 விமானங்கள் அதன் சேவையிலிருந்து வெளியேறுவதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கணித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகிறது.
எனவே அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவது முன் எப்போதையும் விட முக்கியமானது.
ஷேன் ஜோர்டன் மற்றும் கெவின் ரீகன் ஆகியோர் தான் ஏரோபாட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கூடாரங்களை உருவாக்குவதில் மூளையாக செயல்பட்டவர்கள். 2 வருடங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு இந்த யோசனை வந்தது. அப்போதிருந்து அவர்கள் 30க்கும் மேற்பட்ட விமான பாகங்களை மறுசூழற்சி செய்து பூங்கா கூடாரங்கள், மொபைல் அலுவலகங்கள் மற்றும் விடுமுறை விடுதிகளாக மாற்றி உள்ளனர்.
ஒரு ஏரோபாட் அதன் அளவு மற்றும் அம்சங்களை பொறுத்து இந்திய மதிப்பில் 18 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். இதன் தளம் மற்றும் சுவர்களுக்கு அதிக இன்சுலேஷன் தேவைப்படுகிறது. மேலும் இதன் கூரைகள் மீண்டும் வேயப்பட வேண்டும்.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் 2 முதல் 3 வாரங்களில் விமானத்தின் பாகங்களிலிருந்து சமையலறை, மற்றும் குளியலறை கொண்ட சிறிய வீட்டை கட்ட முடியும்.
இதுகுறித்து ஏரோபாட்ஸ் இணை நிறுவனர் கெவின் ரீகன் கூறுகையில், அமெரிக்காவில் சிறிய வீடுகள் இப்போது புகழ்பெற்று வருகின்றன. இனி பெரிய வீடுகளை நம்மால் கட்ட முடியாது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அப்படியே கட்டினாலும் அவற்றை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது கடினம் என்பதை உண்ர்ந்து விட்டனர், என்றார்.
கூடாரங்கள் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு எளிதாக அவற்றை எடுத்து செல்ல முடியும்.
ஏரோபாட்ஸ் நிறுவனத்தின் இரண்டு நிறுவனர்களும் தங்களின் வடிவமைப்புகளை மேலும் மேம்படுத்த விரும்புகின்றனர். இதற்காக சமீபத்தில் கட்டிட கலைஞர் ஒருவரை பிரேத்யேகமாக பணியமர்த்தி உள்ளனர்.
இவர்கள் எதிர்காலத்தில் பரந்து விரிந்த ஐரோப்பிய சந்தையில் நுழைவதை நோக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் அங்கும் வீடுகளை வெதுவெதுப்பாக்குவதற்கான செலவுகள் அதிகம். இங்குள்ள கடற்கரைகளை போலவே அங்கும் பெரும்பாலான கடற்கரைகள் கணிக்க முடியாத வானிலையை கொண்டுள்ளன.
இந்தியாவில் அதிகரித்து வரும் வீடுகள் பற்றாக்குறையை குறைக்க இதுபோன்ற திட்டங்கள் உதவுமா? எங்களிடம் கமென்டில் சொல்லுங்கள்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”