பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்த அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம். செலவு மட்டுமே எவ்வளவு தெரியுமா?

அழைப்பிதழே இப்படி என்றால் நித்தயார்த்தம் அதையும் தாண்டி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்து முடிந்துள்ள்து.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரனான தொழிலதிபர் அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம் ஊரே வியக்கும்படி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. இந்த நிச்சயதார்த்ததிற்கு ஆன ஓட்டு மொத்த செலவு குறித்த விபரம் கேட்பவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.

மும்பை தொழில் அதிபரான முகேஷ் அம்பானியி மகன் ஆகாஷுக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் பிரம்மாண்டமாக நித்தயார்த்தம் நடைப்பெற்றது. ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகாவிற்கும் ஏற்கனவே காதல் இருந்ததாக கிசுகிசிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்ட திருமணம் நிச்சயமானது.

சமீபத்தில் ஆகாஷ் – ஸ்லோகாவின் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இந்த அழைப்பிதழ் கோயில் போல் வடிவமைக்கப்பட்டு அதில் பிள்ளையார் சிலையும் பொருத்தப்பட்டிருந்தது. கூடவே மணம்மக்களின் பெயர்கள் தங்கத்திலியே எழுதப்பட்டிருந்தன. ஒரு திருமண அழைப்பிதழின் விலை 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அழைப்பிதழே இப்படி என்றால் நித்தயார்த்தம் அதையும் தாண்டி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் நடந்து முடிந்துள்ள்து.

குறிப்பாக இந்த விழாவில் கலந்துக் கொண்ட சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் விழாவின் பிரம்மாண்டத்தை கண்டு திகைத்தனர். மணமக்கள் அணிந்திருந்த ஆடையில் தொடங்கி பிரம்மாண்டம், மணமக்களின் மோதிரம், பார்ட்டி, சாப்பாடு, கலை நிகழ்ச்சி என 100 கோடிக்கு மேல் செலவாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. வைர வியாபாரியின் மகளான ஸ்லோகாவின் சொத்து மதிப்பு மட்டுமே பல மில்லியன் டாலர்களை கடந்தது.

இந்த நித்தயதார்த்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் குடும்பம் தொடங்கி பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கஜோல், ஷாரூக்கான், ஷாகீத் கபூர் என பாலிவுட் திரைபிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

????MINE????????????✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

கிரிக்கெட் துறையில் சச்சின், ஹர்பஜன் சிங், ஜகீர் கான் என பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close