அக்ஷய திருதி இந்துகளின் பண்டிகையில் மிக முக்கிய நாளாக உள்ளது. அக்ஷய திருதியில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது வழக்காக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு அக்ஷய திருதி எப்போது வருகிறது, பூஜை செய்ய, தங்கம் வாங்க உகந்த நேரம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பிரபல நாட்டு புறப் பாடகர் அனிதா குப்புசாமி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் சமையல் குறிப்பு, மாடித் தோட்டம், அழகு குறிப்புகள், பண்டிகை நாட்கள் வழிபாடு, பூஜை தொடர்பான பக்தி தகவல்களையும் இதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அக்ஷய திருதி வரும் தேதி, தங்கம் வாங்குவதற்கான உகந்த நேரம் உள்ளிட்வைகள் குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "பொதுவாகவே பண்டிகை, வழிபாடுகள் திருதியை கணக்கில் வைத்து தான் செய்வார்கள். அந்த வகையில் அட்சய திருதியை ஏப்ரல் 22 (சனிக்கிழமை) காலை 7 மணி 49 நிமிடம் முதல் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி 47 நிமிடம் வரை உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வழிபாடு செய்யலாம். அக்ஷய திருதிய பொருட்கள் வாங்கலாம். தானம் கொடுக்கலாம். சுப காரியங்கள் தொடங்கலாம். குறிப்பாக ஏப்ரல் 22-ம் தேதி முழு அட்சய திருதி உள்ளதால் அந்த நாளில் விரதம் இருப்பது, வழிபாடு, பூஜை செய்தல், தங்கம், உள்ளிட்டவைகள் வாங்கலாம்.
23-ம் தேதி திருதியை உடன் வாஸ்து நாள் என்பதால் அன்றைய தினம் வீடு சம்பந்தமான வேலைகள் செய்யலாம். திருதி நேரத்தில் சுப காரியங்களை தொடங்கி செய்யுங்கள். 22-ம் தேதி முழு திருதியாக இருக்கிற காரணத்தால் அந்த நாளில் விரதம், வழிபாடு, தானம் செய்யலாம், தங்கம் வாங்கலாம். பொதுவாகவே திருதியை திதி, செல்வம் பெருக்குவதாகும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“