/tamil-ie/media/media_files/uploads/2020/09/5-13.jpg)
amala age amala akkineni instagram
amala age amala akkineni instagram: தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள் வரிசையில் அமலாவுக்கு நிச்சயம் இடம் உண்டு. இன்றும் பலரின ஃபேவரெட் ஹீரோயின் நடிகை அமலா தான். /
நடனம் கற்க சென்னை வந்த அமலா, பின்னர் நடிகையானார். 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் கனவுக் கன்னியாக வலம்வந்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோது, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருவதோடு, சமூக சேவை மற்றும் கல்லூரி நிர்வாகப் பணிகளிலும் பிஸி. என்றும் இளமையுடன் இருக்கும் அமலா, அம்மா ப்ள்ஸ் மாமியார்.
அமலாவின் இளமை பருவத்தில் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதனால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தட்டு பாத்திரம் கழுவி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.பொருளாதாரரீதியாக அமலா மிகவும் பாதிக்கப்பட, கல்லூரி படிப்பு செலவிற்கும், சாப்பாட்டிற்கும் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படும் நிலை உருவானது. பின் சில இடங்களில் வேலை செய்து கொண்டே, நடனம் மீது கவனம் செலுத்தினார்.
View this post on InstagramBeautiful Portugal #summervacation with Nagarjuna
A post shared by Amala Akkineni (@akkineniamala) on
மிகப்பெரிய சினிமா குடும்பத்திற்கு மருமகளாக சென்ற பின்பு அமலா சினிமாவில் சிறிது ஓய்வு எடுத்தார். பின்பு அம்மா ரோல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். உடல் ஆரோக்கியம், அழக்கு செல்ல பிராணிகள் மீது கொள்ளை பிரியம் புத்தக வாசிப்பு என ஆல் டைம் எனர்ஜி லேடியாக வளம் வந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.