அமீர் பிரபல நடன இயக்குநர். பிரபுதேவாவின் தீவிர ரசிகர். இவரது ‘ஏடிஎஸ் க்ரூ’ ஊட்டி நடனக் குழு கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. இவரும், பாவனியும் இப்போது காதலித்து வருகின்றனர்.
பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆனதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சில விளம்பர படங்களிலும் ஒன்றாக நடித்தனர்.
அண்மையில் கூட பாவனி பிறந்தநாளை முன்னிட்டு அமீரும், பாவனியும் துபாய் நாட்டுக்கு டூர் சென்றனர். அந்த போட்டோஸை அமீர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அமீரும், பாவனியும் இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர்.
இங்கே பாருங்க…






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“