Advertisment

கெந்திங் மலை புத்தர் கோயில்: அம்மு அபிராமி இன்ஸ்டா வீடியோ

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் இருக்கும் கெந்திங் மலையில், ஒரு கேபிள் கார் சேவையும் பயன்பாட்டில் உள்ளது.

author-image
WebDesk
New Update
Genting Highland

Genting Highland Malaysia (Image: geoantharas.com)

பயணங்கள் வாழ்வின் தலைசிறந்த ஆசான். அதுவும் ஆன்மிகப் பயணங்களைப் பொருத்தவரையில் இன்னும் ஆழமானவை. காரணம் ஆன்மிகப் பயணம் என்பது சாதாரணமாக இடங்களைச் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. ஒருவரின் ஞானத்தையும் தேடுதலையும் விரிவுபடுத்திவிடும் அற்புதத்தன்மை உடையவை பயணங்கள்.

Advertisment

சமீபத்தில் அம்மு அபிராமி மலேஷியாவுக்கு சென்றார். அங்கு பிரபலமான Genting Highlands என்று அழைக்கப்படும் கெந்திங் மலை புத்தர் கோயிலில் சுற்றிப் பார்த்த போது எடுத்த வீடியோவை அபி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்….

கெந்திங் மலை

பகாங் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில், தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ள கெந்திங் மலை, மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும். இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது.

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் இருக்கும் கெந்திங் மலையில், ஒரு கேபிள் கார் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. கெந்திங் மலையின் அடிவாரத்தில் இருந்து, இந்தச் சேவையைப் பயன்படுத்தி, மலை உச்சிக்குச் செல்லலாம். அதன் நீளம் 3.38 கி.மீ.

கெந்திங் மலையில் First World Hotel எனும் மிகப் பெரிய தங்கும் விடுதி உள்ளது. இதில் 6,118 அறைகள் உள்ளன.

இந்த மலைப் பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். மேலே செல்வதற்கு கெந்திங் ஸ்கைவே (Genting Skyway) என்ற இடத்தில் இருந்து, திறந்த ரயில்பெட்டி வசதியும் உள்ளது.

கெந்திங் மலைக்கு செல்லும் பாதை மிகவும் அழகாக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டங்களால் சூழப்பட்ட அழகான காட்சிகள், கண்டு ரசிக்கக் கூடியதாக உள்ளன.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளை இங்கு அதிகமாகக் காண முடியும்.

ஒருவேளை நீங்க மலேஷியா போனா, இந்த அழகான இடத்தை கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment