லொள்ளு சபா 2 எப்போ வரும்? அமுதவாணன் பேட்டி

போன வருஷமே, 3 எபிசோடுக்கான சூட் முடிஞ்சிடுச்சு. அப்புறம், பிக்பாஸ் நெருங்குனதுனால, ஒரே நேரத்தில் இரு பெரிய ஷோக்கள் பண்ண வேண்டாம் என்பதற்காக முதலில் பிக்பாஸ் ஒளிபரப்புனாங்க.

போன வருஷமே, 3 எபிசோடுக்கான சூட் முடிஞ்சிடுச்சு. அப்புறம், பிக்பாஸ் நெருங்குனதுனால, ஒரே நேரத்தில் இரு பெரிய ஷோக்கள் பண்ண வேண்டாம் என்பதற்காக முதலில் பிக்பாஸ் ஒளிபரப்புனாங்க.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
லொள்ளு சபா 2 எப்போ வரும்? அமுதவாணன் பேட்டி

'லொள்ளு சபா' காமெடி ஷோ இன்றைய காமெடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் 'தகப்பன் சாமி' என்று சொல்லலாம். முதன் முதலில். மறைந்த நடிகர் பாலாஜி லொள்ளு சபாவில் ஹீரோவாக நடிக்க, பிறகு சந்தானம் வந்து நிகழ்ச்சியை உச்சிக்கு கொண்டுச் சென்றது நமக்கு தெரிந்ததே.

Advertisment

ஒருக்கட்டத்திற்கு மேல் அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, ரசிகர்கள் இன்றளவும் யூடியூப் வாயிலாகவும், சமூக தளங்கள் வாயிலாகவும் பழைய கிளிப்பிங்ஸ்களை பார்த்து ரசித்து வருகின்றனர். மீம்ஸ்-களிலும் லொள்ளு சபா டெம்ப்ளேட் இடம்பெறாமல் இல்லை.

நம்ம ஊரு ஹீரோ; நிஜ ஹீரோக்களுடன் கலக்கும் விஜய் சேதுபதி

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

அந்தளவுக்கு இன்றளவும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் அடுத்த வெர்ஷன் கடந்த ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வெர்ஷனில் விஜய் டிவி புகழ் 'அமுதவாணன்' ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, லொள்ளு சபா நிகழ்ச்சி அறிவிப்போடு நின்று போனது.

இதுகுறித்து அறிய இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக அமுதவாணனை தொடர்பு கொண்டு நாம் பேசினோம். அவர் கூறுகையில், "எனக்கே அதை ஏன் ஒளிபரப்புல-னு தெரியலையே பிரதர் (சிரிக்கிறார்). நான் தான் இதில் சந்தானம் ரோலில் நடிக்கிறேன்.

Advertisment
Advertisements

publive-image

இதுவரை மூன்று எபிசோடும் எடுத்தாச்சு. ஆனால், இதுவரை ஏன் ஒளிபரப்பு ஆகல-னு தெரியல.

போன வருஷமே, 3 எபிசோடுக்கான சூட் முடிஞ்சிடுச்சு. அப்புறம், பிக்பாஸ் நெருங்குனதுனால, ஒரே நேரத்தில் இரு பெரிய ஷோக்கள் பண்ண வேண்டாம் என்பதற்காக முதலில் பிக்பாஸ் ஒளிபரப்புனாங்க. அதன்பிறகு, லொள்ளு சபா வரும்-னு நினைச்சோம். ஆனா, இப்போ வரை வரல. இப்போ அடுத்த பிக்பாஸ் சீசனே வந்துடும் போல.

சென்சாரில் ’கட்’ ஆன ’ஜிப்ஸி' காட்சிகள்: யூ ட்யூபில் வைரல்

இந்த லொள்ளு சபா வெர்ஷனில், எனக்கு ஜோடியாக விஜய் டிவி புகழ் 'மைனா' நடிக்கிறாங்க. தவிர, பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி உள்ளிட்ட நிறைய பேர் இதுல நடிக்குறாங்க.

முன்பு ஒளிபரப்பான 'லொள்ளு சபா' வை ராம்பாலா இயக்கியிருந்தார். இப்போது 'அது இது எது' தாம்சன் இயக்குகிறார். மிக விரைவில் லொள்ளு சபா ஒளிபரப்பு பற்றிய அறிவிப்பு வரும்-னு நம்புறேன் பிரதர்" என்று முடித்தார் கான்ஃபிடன்ட்டாக.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: