Advertisment

புகழ் மாடு டூ புகழ் ஒரிஜினல் லூசு.. ஜாக்குலின் - புகழ் லாக்டவுன் அட்ராசிட்டிஸ்!

Anchor Actress Jacqueline Pugazh Chats 'அக்கா அக்கா..' என அடுக்கு அடுக்காய் பேசி கலாய்த்தபடி நகர்ந்தது இவர்கள் இருவருடைய உரையாடல்.

author-image
WebDesk
Jun 07, 2021 20:30 IST
Anchor Actress Jacqueline Pugazh Rakshan Myna Nandhini Chat Tamil News

Anchor Actress Jacqueline Pugazh Rakshan Myna Nandhini Chat Tamil News

திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுக்கென்று யூடியூப் சேனல் ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையில், விஜய் டிவியின் பெரும்பாலான முகங்களை யூடியூபில் காணலாம். அதிலும் ஓயாமல் பேசி பலரிடம் மொக்கை வாங்கும் ஜாக்குலின், ஜாக் அண்ட் ஜில் எனும் சேனலை தொடங்கியுள்ளார்.

Advertisment
publive-image

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். பெரும்பாலும் Vlog விடியோக்கள்தான் இவருடைய சேனலில் அதிகம். அந்த வகையில், இந்த லாக்டவுனில் தன் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள எண்ணிய ஜாக்குலின், அதை அப்படியே வீடியோ எடுத்தால் என்ன என்று நினைத்து, அவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்து தன் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

publive-image

"இந்த வீடியோ பண்ணுறதுக்கு முதன்மை காரணம், உங்கள் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். உங்கள் நண்பர்களுடைய போன் நம்பர்கள் எல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும். இந்த லாக்டவுன் பயன்படுத்தி, சும்மா ஒரு போன் போட்டு அவங்க எல்லோரும் எப்படி இருக்காங்கனு கேட்டு தெரிஞ்சிக்கோங்க. நான் இப்போ அதுதான் செய்யப்போறேன்" என்றபடி ரக்ஷனுக்கு போன் செய்தார்.

publive-image

'ரக்ஷன்தான் உடனே தன்னுடைய போன் அழைப்பை எடுத்துப் பேசுவான்' என்றபடி போன் செய்தவரின் முகத்தில் கறியை பூசிவிட்டார் ரக்ஷன். இதனால், மைனா நந்தினிக்கு அடுத்த அழைப்பு சென்றது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் நந்தினி பேசினார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, பல்வேறு விதமான மொக்கையான விவாதங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தது. நந்தினி நடித்து வெளிவந்திருக்கும், நவம்பர் ஸ்டோரி ஒரு வெப் சீரிஸா அல்லது திரைப்படமா என்கிற சண்டை அரங்கேறியது. இப்படி ஜாலியான டாக் ஒரு கட்டத்தில் நிறைவுபெற, அடுத்த அழைப்பு குக் வித் கோமாளி பாலாவிற்கு சென்றது.

publive-image

'அக்கா அக்கா..' என அடுக்கு அடுக்காய் பேசி கலாய்த்தபடி நகர்ந்தது இவர்கள் இருவருடைய உரையாடல். அடுத்ததாக மக்களின் தற்போதைய நாயகன் புகழுக்கு போன் செய்தார். தன்னுடைய மொபைலில் புகழின் பெயர் - புகழ் மாடு என்பதிலிருந்து புகழ் ஒரிஜினல் லூஸு என்று சேமித்திருப்பதாக ஜாக்குலினும், ஜாக்குலின் பசு என்பதிலிருந்து ஜாக்குலின் ஒரிஜினல் பைத்தியம் என்று ஜாக்குலின் பெயரை சேமித்திருப்பதாகப் புகழும் மாறிமாறி பல உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டனர்.

"நீ பேசுறதை கன்டின்யூ பண்ணு, நான் மழைல நனைய போறேன்" என்றுகூறிவிட்டுப் புகழ் நகர்ந்தார். அடுத்ததாக குரேஷியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, காலை 9 மணிக்குத் தொடர்பு கொண்ட ரக்ஷன், மாலை 3 மணிக்கு ஜாக்குலினை தொடர்புகொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட களைப்பு போல. தூக்கத்திலேயே உரையாடிக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்திக்கொண்டு விடைபெற்றார். பேசிய அனைவரும் ஜாக் அண்ட் ஜில் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் என்று கூறுவதை மறக்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijaytv Pugazh #Anchor Jacqueline
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment